வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் (Th Greatest Of All Time) படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய் இன்று கேரளா சென்றடைந்துள்ளார். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இணையாக நடிகர் விஜய் பல ஆண்டுகளாக கேரளாவில் தன் மாஸ் படங்களுக்காக பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை முன்னதாக விஜய் சென்றடைந்தார். 


தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் விஜய் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அவரது வருகையை ஒட்டி இன்று காலை முதலே அவரது ரசிகர்கள் ஹாஷ்டேகுகளை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அத்தோடு நிற்காமல் விமான நிலையத்திலும் கேரள விஜய் ரசிகர்கள் கடலென திரண்டு ஸ்தம்பிக்கச் செய்துள்ளனர்.


இந்நிலையில் விஜய்யைக் காண கேரளாவில் அவர் செல்லும் வழியில் எல்லாம் ரசிகர் கூட்டம் கூடிய வீடியோக்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 






இறுதியாக நடிகர் விஜய் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங்குக்காக கேரளா சென்றிருந்தார். அதன் பின் தன் படத்தின் ஷூட்டிங்குக்காக 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தான் கேரளாவுக்கு செல்கிறார்.


 






இந்நிலையில் கேரளா வந்தடைந்த விஜய்யை காண திரண்ட கூட்டத்தின் வீடியோக்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.


 






மேலும் விஜய்யை பார்க்க திரண்ட கூட்டத்தால் திருவனந்தபுரம் விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகள், லுலு மால் சாலை உள்ளிட்ட இடங்கள் வாகன நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்நிலையில் “இயக்குநர் வெங்கட் பிரபு எப்படி விஜய்யை வைத்து கேரளாவில் படம் எடுக்கப்போகிறாரோ?” என ரசிகர்கள் ஜாலியான கமெண்டுகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.


 






‘கடவுளே தளபதி..’ என்றெல்லாம் கேரள விஜய் ரசிகர்கள் கோஷம் போடும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.