✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Durai Vaiko: திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி - வைகோ அறிவிப்பு

செல்வகுமார்   |  18 Mar 2024 05:23 PM (IST)

Durai Vaiko: திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி - வைகோ அறிவிப்பு

திருச்சியில் மதிமுக கட்சி சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. இந்த முதல் கட்ட தேர்தலிலே, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை உறுதி செய்யும் பணியிலும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை உறுதி செய்யும் பணியிலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக கட்சிக்கு, மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

Also Read: DMK Alliance: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி?; அதிகாரப்பூர்வ பட்டியல் இதோ!

துரை வைகோ:

இந்நிலையில், மதிமுக கட்சி சார்பில் யாரை களமிறக்குவது தொடர்பாக மதிமுக கட்சி சார்பில் ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், துரை வைகோவை போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

சின்னம் குறித்து பேசிய வைகோ. மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. பம்பரம் சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளோம். பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சிதான். பம்பரம் சின்னம் கிடைத்தால், அதில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

Also Read: சிபிஐ சார்பாக போட்டியிடும் திருப்பூர், நாகை தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

Published at: 18 Mar 2024 03:42 PM (IST)
Tags: breaking news Abp nadu
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • Durai Vaiko: திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி - வைகோ அறிவிப்பு
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.