இயக்குநர் சுந்தர் சி - நடிகை குஷ்பூ காதலை முதன்முதலில் கண்டிபிடிச்சது நான் தான் என பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


1990 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், கௌதமி ஆகியோர் நடித்த படம் ‘சந்தனக்காற்று’. இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விச்சு விஸ்வநாத். பல படங்களில் காமெடி, வில்லன், துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர். இவர் இயக்குநர் -நடிகர் சுந்தர்.சி -யின் மிகச்சிறந்த நண்பர் ஆவார். அவருடைய இயக்கத்தில் மட்டும் 35 படங்களில் நடித்துள்ள விச்சு விஸ்வநாதனின் நடிப்பில் சமீபத்தில் காபி வித் காதல் படம் வெளியாகியிருந்தது. இதுவும் சுந்தர் சி படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 




இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள விச்சு விஸ்வநாத் சுந்தர் சி உடனான தனது நட்பு குறித்து பேசியுள்ளார். சந்தனக்காற்று படத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் சுந்தர் உதவி இயக்குநராக பணியாற்றினார். எங்களை சுற்றியிருப்பவர்கள் அடிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும் உண்டு. அதில் சுந்தரும் என்னை வந்து என்னை அடிச்சாரு. அப்ப இருந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரே ஊர்காரர் என்பதால் இன்னும் நெருக்கம் அதிகரித்தது. 






மேலும் நான் இயக்குநரானால் எல்லா படத்துலையும் நீங்க இருப்பீங்க என என்னிடம் அவர் சொன்னார். சுந்தர் சியின் முதல் படமான முறைமானில் நடித்தேன். அப்படத்தின் தயாரிப்பாளர் சென்டிமென்ட்டாக ஒரு காட்சி எடுக்க சொன்னார். ஜெயராம் வர லேட் ஆக அங்க மேக்கப் போட்டு இருந்த ஒரே ஆள் நான் தான். அதனால் நான் நடித்த காட்சி முதலாவதாக படமாக்கப்பட்டது. அதேசமயம் அப்படம் எனக்கு கல்யாணம் ஆகி முதல் படமே இதுதான். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தப்ப என் மாமனார் வீட்டில் இருந்து தினமும் படக்குழுவினருக்கு சாப்பாடு வந்தது. 


38 நாட்களிலேயே படப்பிடிப்பு முடிந்தது. அப்போது குஷ்பு - சுந்தர் சி இடையே காதல் மலர்ந்தது. படத்தில் இடம் பெறும் போட் ரேஸ் காட்சிக்காக நாங்க கேரளா செல்கிறோம். அப்ப நானும் சுந்தரும் காருல போனோம். மொபைல் போன் இல்லாத அந்த காலக்கட்டத்தில் போகிற வழியில இருக்கும் போன் பூத்தில் எல்லாம் நிறுத்தி போன் பேசிட்டே வந்தாரு. நான் என்னடா இது ஏதோ தப்பா தெரியுதே நினைச்சி கேட்டேன். கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் மறுநாள் ஃபுல்லா கண்டுபிடிச்சிட்டேன். நான் அவங்க காதலுக்கு முழு சப்போர்ட் பண்ணினேன்.