தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு ராணி கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமான முகம், கம்பீரம், கர்வம், அழகு என அனைத்தையும் ஒன்று சேர்த்த ஒரு உருவம் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இந்த அழகு பெட்டகத்தின் 41வது பிறந்தநாள் இன்று. ஹேப்பி பர்த்டே தேவசேனா!!!


 



நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் :


உலக அழகி ஐஸ்வர்யா ராய் பிறந்த மண்ணில் இருந்து நமக்கு கிடைத்த மற்றோரு தேவதை அனுஷ்கா ஷெட்டி. ஒரு யோகா ஆசிரியராக இருந்த நடிகைக்கு அருமையான திரைப்பட வாய்ப்பு கிடைத்ததன் மூலம் நடிகையானவர். சகலமும் யோகா என்று இருந்தவருக்கு இன்று எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அசால்ட்டாக அசத்தக்கூடியவர். கிளாமர் ரோல்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு பசிக்கு தீனியாய் இருந்தது அருந்ததி, தேவசேனா கதாபாத்திரங்கள். அது மட்டுமின்றி பஞ்சமுகி, ராணி ருத்ரம்மா தேவி, இஞ்சி இடுப்பழகி என நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களை விரிய செய்தவர் அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு திரையுலகமே இவரின் வளர்ச்சியை பார்த்து வியந்தது. 


 






 


100% கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் அனுஷ்கா:


எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதற்கு நியாயமான நடிப்பை 100% கொடுக்க கூடியவர் அனுஷ்கா. அதற்கு உதாரணம் வானம் திரைப்படத்தில் ஒரு பாலியல் தொழில் செய்தும் பெண்ணாக நடித்தது. இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்கு தனது எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை அதிகரித்தார். இந்த செயலை எந்த ஒரு ஹீரோயினாக இருந்ததாலும் செய்ய தயங்குவர். ஆனால் அதை சாத்தியப்படுத்தியது அனுஷ்கா மட்டுமே. ஒரு நடிகையின் அழகை அனைவரும் ரசிப்பார்கள் ஆனால் அழகையும் தாண்டி மற்றவர்களை வியக்க செய்வதும் இன்ஸ்பயர் செய்வதும் அனுஷ்காவால் மட்டுமே முடியும். 


 






 


அனுஷ்கா அழகின் ரகசியம்  இது தானா :


பொதுவாக நடிகைகளின் இளம் வயதில் தான் வாய்ப்புகள் குவியும்; ஆனால் அனுஷ்காவுக்கு வயது கூட அழகும் மெருகும் ஏறிக்கொண்டே போகிறது. வெளிப்புற அழகு மட்டுமின்றி மனதளவில், அர்ப்பணிப்பில், செயலில், எண்ணங்களில் என அனைத்திலும் அழகாய் இருப்பது தான் அனுஷ்காவை என்றும் அழகுடன் வைத்திருப்பதற்கு முக்கியமான காரணம். 


தமிழில் "இரண்டு" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுஷ்கா இதுவரையில் நடித்த ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இந்த நடிகை தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  


ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே அனுஷ்கா !!!