மாமன்னனில் கம்பேக் கொடுத்த வடிவேலு
பல வருடம் திரை வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த நடிகர் வடிவேலு, கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து சரியான கம்பேக் கொடுத்தார். எத்தனையோ முறை நகைச்சுவையாக அழுது நம்மை சிரிக்க வைத்த வடிவேலு இப்படத்தில் கொஞ்சம் சீரியஸாக அழுததற்கே பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் குடம் குடமாக ஊற்றிவிட்டது.
இப்படத்தில் வடிவேலு மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு இடையிலான காட்சிகள் பெருமபாலான ரசிகர்களை கவர்ந்தது. இன்னொரு முறை இப்படியான ஒரு கூட்டணியை திரையில் பார்க்கும் வாய்ப்பு மிக அரிது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இன்னொரு முறை கூட்டணி அமைக்கு தகவல் வெளியானது. மாமன்னன் படத்தின் வெற்றிக்கும் பிறகு இரண்டாவது முறையாக வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்து வரும் படம் மாரீசன்
மாரீசன்
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் படமே மாரீசன். வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப் பட்ட நிலையில் படத்தின் டைட்டில் வெளியிடப் பட்டது. மாமன்னன் படத்தைப் போல் சீரியஸாக இல்லாமல் ஃபீல் குட் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
விருது நிச்சயம்:
இப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் வடிவேலு சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் ‘ இப்போது நான் நடித்து வரும் படம் ரொம்ப வித்தியாசமான ஒரு கதை . இந்தப் படத்திற்கு நிச்சயம் மிகப்பெரிய விருது கிடைக்கும் . பெண்கள் , ஃபேமிலி ஆடியன்ஸ் எல்லாருக்கும் இந்தப் படம் ரொம்ப பிடிக்கும். அப்படியான ஒரு கதை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : 23 years of Aanandham : அண்ணன் - தம்பி பாசம் என்னனு தெரியுமா? ஆனந்தம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
Saamaniyan: “இது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அழும் படம்” - ராமராஜனை புகழ்ந்த பிரவீன் காந்தி!