நடிகர் வடிவேலு மற்றும் ராதிகாவின் ரீசண்ட் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் வடிவேலு, நடிகை ராதிகாவுடன் சேர்ந்து எடுத்த ரிஸ்க் எடுக்குறதெல்லம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற காமெடி ரீல்ஸ் வீடியோவை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் 5 மணி நேரத்தில் 80 ஆயிரம் வியூஸை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருதமலை படத்தில் இடம்பெற்ற இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
நடிகர் வடிவேலு என்றாலே நகைச்சுவைதான் நியாபகத்திற்கு வரும். தனது பேச்சு நடை, உடை உடல் மொழி என அனைத்திலும் காமெடி கலையை வெளிப்படுத்தும் திறன் படைத்த கலைஞன் வடிவேலு. சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அவரின் காமெடிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
புலிகேசி, தலைநகரம், ஜில்லுனு ஒரு காதல், வின்னர், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் நடிகர் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருப்பார்.
வெற்றிக் கொடிக்கட்டு படத்தில் துபாய் ரிட்டனா வந்திருக்கும் வடிவேலுவை பார்த்திபன் ஓட ஓட விரட்டிக் கொண்டிருப்பார். அந்த படத்தில் பார்த்திபன் வருவதைப் பார்த்த வடிவேலு பயந்து கொண்டே, வந்துட்டான்யா வந்துட்டான் என சொல்லும் டயலாக் படு பேமஸ்.
பிரஷாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழுக்க, முழுக்க வடிவேலு காமெடி தான் காரணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவின் வலிக்குது, அழுதுடுவேன் உள்ளிட்ட காமெடி வசனங்கள் ரசிகர்களை வயறு குலுங்க சிரிக்கை வைத்தது.
சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் கோட் சூட் போட்டுக் கொண்டு அந்த ஏரியாவின் ரௌடியாக பார்ம் ஆக வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருக்கும் வடிவேல் டீ கடையில் பஞ்சாயத்து செய்து ரௌடிகளிடமே நானும் ரௌடிதான் என்று பீலா விடும் டயலாக் வேற லெவல் ஹிட் ஆனது. இப்படி இன்னும் அவரின் ஏராளமான காமெடிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் சில வருடங்களாக வடிவேலு இல்லாத நகைச்சுவை காட்சிகளை மட்டுமே காண முடிகின்றது. இன்னும் சொல்லப்போனால், அவரின் இடம் வெற்றிடமாகவே உள்ளது. அணமையில் மாமன்னன் படத்தில் நடித்துள்ள வடிவேலுவின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தந்தது. இந்நிலையில் நடிகை ராதிகாவுடன் சேர்ந்து வடிவேலு எடுத்துள்ள காமெடி ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.