வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் சூப்பர் ஃபாஸ்ட் ஜெட் ஸ்பீடில் பிரபலமடைந்து விடுகின்றனர் சின்னத்திரை நடிகர் நடிகைகள். அப்படி ஏராளமான ரசிகர்களை தனது வசீகரமான தோற்றம், கொஞ்சல் பேச்சு, துறுதுறுப்பான நடிப்பால் ஈர்த்தவர் நடிகை ஆலியா மானசா. அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
ரீல் ஜோடி ரியல் ஜோடியானது :
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் செம்பாவாக அறிமுகமான ஆலியா ரீல் ஜோடி சஞ்சீவ் கார்த்திக்குடன் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் அவர்கள் ரியல் ஜோடிகளாகவே ஆனார்கள். சஞ்சீவ் குடும்பத்தில் சம்மதித்ததால் இருவருக்கும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. மிகவும் சந்தோஷமான இந்த தம்பதிக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதியினர் தனது குடும்ப நிகழ்வுகள், அவுட்டிங் என அனைத்து தருணங்களையும் அவர்களின் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இவர்களின் சோஷியல் மீடியா பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். மிகவும் பிரபலமான இந்த ஜோடி குழந்தைகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.
பேன் ஃபாலோவர்ஸ்:
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் குழந்தைத்தனம் மாறாத ஆலியா மானசாவிற்கு இருக்கும் ரசிகர்களை காட்டிலும் அவரின் மகள் அய்லாவிற்கு பேன் ஃபாலோவர்ஸ் அதிகம். ஆலியாவின் இரண்டு குழந்தைகளும் பிறந்தது முதல் வளர்வது வரை அனைத்து தருணங்களையும் வீடியோவாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். எந்த வீடியோ போட்டாலும் லைக்ஸ்கள் மளமளவென குவியும். அந்த வகையில் சமீபத்தில் கூட தனது மகன் முதல் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன.
கதாபாத்திரமாகவே மாறி விடும் ஆலியா :
எந்த கதாபாத்திரத்திரமாக நடித்தாலும் அந்த கேரக்டரில் அப்படி ஒன்றிப்போய் விடும் ஆலியா மானசாவை பெரும்பாலான ரசிகர்களுக்கு அவரின் கதாபாத்திரத்தின் பெயர்களான செம்பா, சந்தியா தற்போது இனியா என்றே அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு யதார்த்தமாக நடிக்க கூடியவர். ஆலியா மனசா எந்த அளவிற்கு தனது பணியில் முழு ஈடுபாடு செலுத்துகிறாரோ அதே போல தனது குடும்பத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு செல்லக்குட்டியாக வலம் வரும் ஆலியா மானசா இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாப்பு குட்டி மேலும் மேலும் வளர்ந்து, ஆரோக்கியமாக, சந்தோஷமாக நீடுடி வாழ வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.