தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்பீம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.




சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதை அறிவித்து, யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.






இமான் இசை அமைத்துள்ள உள்ளம் உருகுதய்யா என்ற இந்த பாடலில், நடிகர் சூர்யா முருகன் தோற்றத்தில் நடித்துள்ளார். அவருடன் பிரியங்கா மோகனும் அந்த காலத்து பாடல் காட்சிகளில் வரும் தோற்றத்தில் நடித்துள்ளார். குடும்ப பின்னணியில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலான “வாடா தம்பி” ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, காதல் பாடலாக வெளியாகியுள்ள இந்த பாடலில் சூர்யா முருகன் தோற்றம் உள்பட பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார்.




இந்த பாடல் வெளியான பிறகு நடிகர் சூர்யா சிறு வயதில் முருகன் தோற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படமும், தற்போது முருகன் வேடத்தில் நடித்துள்ள தோற்றமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடனன் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ரெடிங் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ், வினய், சரண்யா பொன்வன்னண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளம் உருகுதையா என்ற முருகன் பக்தி பாடல் மிகவும் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண