நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் திரைப்படத்தின் ஒரு சுவாரஸ்ய ஃப்ளேஷ் பேக் கதை தான் இது.


அழகிய தமிழ்மகன், 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தை பரதன் இயக்கியிருந்தார்.  ஜீவா திரைக்கதை எழுதியிருந்தார். இத்திரைப்படத்தில் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடித்திருந்தார் .  இத்திரைப்படம் நவம்பர் 8, 2007இல் வெளியிடப்பட்டது. தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.


படத்தை சுவர்க்க சித்ரா அப்பச்சன் தயாரித்திருந்தார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஏற்கெனவே விஜ்ய, சிம்ரன் நடிப்பில் வெளியான உதயா படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் இது இரண்டாவது படம். படத்தில் எல்லாபு புகழும், பொன்மகள் வந்தாள், நீ மர்லின் மன்றோ, வளையபடித் தவிலே, கேளாமல் கையிலே, மதுரைக்குப் போகாதடீ என ஆறு சூப்பர் டூப்பர் பாடல்கள் உண்டு.


இதில் விஜய் இன்ட்ரோ சாங் உருவான கதையைத் தான் பார்க்கப் போகிறோம். ஒரு நாள் விஜய் சூட்டிங் முடித்துத் திரும்பிச் செல்லும்போது அவரது காரில் தயாரிப்பாளர் சுவர்க்கசித்ரா அப்பச்சனும், இயக்குநர் பரதனும் ஏறிக் கொண்டனர். அவரிடம் ஒரு சிடியைக் கொடுத்து இது படத்தின் இன்ட்ரோ பாடல் என சொல்லுகின்றனர். விஜய்யும் பாடலை தனது காஸ்ட்லி காரின் காஸ்ட்லி சவுண்ட் சிஸ்டத்தில் ப்ளே செய்துள்ளார். முழுப் பாடலையும் கவனமாகக் கேட்ட அவர், வீட்டில் இறங்கும் போது பாடல் ஸ்லோ டெம்போவில் இருக்கிறது. இது எனது இன்ட்ரோவுக்கு செட்டாகுமா என்று தெரியவில்லை. கொஞ்சம் வேற மாதிரி ஃபாஸ்ட் பேஸ் சாங் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டாராம்.
அதிர்ந்து போன தயாரிப்பாளார் அப்பச்சனும், இயக்குநர் பரதனும் என்ன செய்ய என்று யோசித்துவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுக்கே செல்வோம் என்று காரை வரவழைத்து அங்கு சென்றுள்ளனர். அங்கு திடீரென இருவரும் ஆஜராக ஏ.ஆர்.ரஹ்மான் மணி 10.30க்கு மேல் ஆகிவிட்டதே இப்போது வந்துள்ளீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.




அதற்கு அப்பச்சன் இல்லை இந்த இன்ட்ரோ சாங் என்று இழுத்துள்ளார். என்ன சொல்லுங்க என்று ரஹ்மான் கேட்க, விஜய் சார் இந்த சாங் ஸ்லோவா இருக்கு பிடிக்கலை என்று சொல்லிட்டார் என்றார். சரி உங்களுக்கு என அப்பச்சனைப் பார்த்து ரஹ்மான் கேட்க. தயாரிப்பாளராச்சே பொறுப்பை நம் தலையிலும் போட்டுக் கொள்வோம் என்று, எனக்கும் திருப்தியில்லை என்று கூறியுள்ளார்.


உடனே ரஹ்மான் முகத்தில் எந்த அசவுகரியத்தையும் காட்டாமல், கவிஞர் வாலிக்கு அந்த நேரத்திலேயெ ஃபோன் செய்துள்ளார். வாலியிடம், சார் நாம விஜய்க்கு ஒரு இன்ட்ரோ சாங் கொடுத்தோம் அது செட் ஆகலையாம். நீங்கள் புதுசா ஒரு இன்ட்ரோ பாடல் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வாலியும் உடனே ஓகே சொல்லிவிட அச்சப்பனும், பரதனும் அங்கிருந்து கிளம்பினர். மறுநாள் 10 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு அழைக்க அச்சப்பனும், பரதனும் சென்றனர். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் பாடலை இசைத்துள்ளார்.
அதுதான் வாலி எழுதிய எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே


வாலி வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே .. " என்ற பாடல் சிடியைக் கொண்டு சென்று விஜய்யிடம் காட்ட அவர் டபுள் ஹேப்பியாகிவிட்டாராம்.


ஓப்பனாக ஒரு நடிகர் சொன்ன குறையை ஈகோவாக எடுத்துக் கொள்ளாமல் அதில் திருத்தம் செய்த ரஹ்மானும், உடனே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்த வாலியும் வெற்றிக்கான முன்னுதாரணங்கள்.