கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி , கருணாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது


கங்குவா இசை வெளியீடு


சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் கங்குவா. கிட்ட 350 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை பான் இந்திய அளவில் கொண்டு சேர்க்க படக்குழுவினர் முழு வீச்சுடன் ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ், இந்தி , கன்னடம் , மலையாளம், தெலுங்கு , ஆங்கிலம் , ஃபிரெஞ்சு , ஸ்பேனிஷ் என மொத்தம் 6 மொழிகளில் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் குரல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இருக்கிறது. வட மாநிலங்களில் மட்டும் 3500 ஸ்கிரீன்களில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் படக்குழுவினர் தீவிரமான ப்ரோமோஷன்களில் இறங்கியுள்ளார்கள். ப்ரோமோஷனுக்காக மும்பை சென்ற சூர்யா தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு கல்லூரி மாணவர்களை அவர் சந்தித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க






மாணவர்களிடம் பேசிய சூர்யா ' பாய்ஸ் & கர்ல்ஸ் நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க . நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பசங்க கிடைப்பாங்க. வாழ்க்கையில் பார்க்க இன்னும் நிறைய இருக்கும் . உங்கள் குடும்பம் , நட்பு மற்றும் உங்கள் நம்பிக்கைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.  எது வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் ஆசைப்படும் எல்லாமே நடந்துவிடாது ஆனால் உங்களுக்கு தேவையான எல்லாமே நடக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' என சூர்யா கல்லூரி மாணவர்களிடம் பேசினார். சூர்யாவுடன் கங்குவா படத்தின் நாயகி திஷா பதானி , பாபி தியோல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். 




மேலும் படிக்க : Surya Sethupathi : அப்பா ஒரு நாளைக்கு 500 ரூபாதான் குடுப்பாரு...தம்பி அதான் என் சம்பளம்...கலாய் வாங்கு விஜய் சேதுபதி மகன் சூர்யா