Actor surya : ஒரு பக்கம் சிறுத்தை சிவா.. மறுபக்கம் சுதா கொங்கரா.. பலே திட்டத்துடன் நடிகர் சூர்யா!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்திற்கு பிறகு, சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவுடனும் நடிகர் சூர்யா மீண்டும் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தெரிகிறது.

Continues below advertisement

சூர்யா நடித்து தயாரித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்  “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.படத்தின் போஸ்டர்கள், முன்னோட்டம், ஆகியவை மக்களிடம்  வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்தில் இருந்து “வாடா தம்பி, உள்ளம் உருகுதைய்யா” உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி தாறுமாறு ஹிட் ஆனது. 

Continues below advertisement

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி 4 ம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்திலும், இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

 

சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு, நடிகர் சூர்யா தற்போது ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்திற்கு பிறகு, சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவுடனும் நடிகர் சூர்யா மீண்டும் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும், இரண்டு திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குளோபல் சமூக ஆஸ்கார் விருதுகள் 2021 க்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் சமூக ஆர்வமுள்ள திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர்கள். ஜோதிகா அவர்களின் ஹோம் பேனரான 2D புரொடக்ஷன்ஸின் கீழ் சமூக அக்கறையுள்ள இந்தப் படங்களை இணைந்து தயாரித்ததற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola