அமரன்
சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படத்தை ஒட்டுமொத்த தமிழ் சமூகமே கொண்டாடி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரை அனைவரும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் அமரன் திரைப்படத்தை நடிகர் சூர்யா தனது மனைவி தந்தை ஜோதிகா மற்றும் தந்தை சிவகுமார் உடன் இணைந்து பார்த்துள்ளார். படம் பார்த்து படக்குழுவினரை சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார் சூர்யா.
அமரன் படம் பற்றி சூர்யா
" அமரன் படத்தை ரொம்பவும் ரசித்தேன். படத்தில் பணியாற்றிய ஒவ்வொருத்தரும் மனதார வேலை பங்காற்றி இருக்கிறார்கள். அமரன் படத்தின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்" என சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமரன் பற்றி ஜோதிகா
" ஜெய் பீம் படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் வந்த மற்றொரு சிறந்த படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு அற்புதமான வைரத்தை உருவாக்கியிருக்கிறார். நடிகை சாய் பல்லவி இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எவ்வளவு சவால்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்து ரெபெக்கா வர்கீஸின் பாசிட்டிவிட்டி எங்கள் அனைவரது இதயத்தையும் தொட்டிருக்கிறது. நீங்கள் எங்களைச் சுற்றி இருக்கிறீர்கள் மேஜர் முகுந்த் வரதராஜன். உங்களது வீரத்தை ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடுகிறார். உங்களைப் போலவே உங்கள் குழந்தைகளையும் பெருமையாக நாங்கள் வளர்ப்போம்." என ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்