புறநாநூறு


சூரரைப் போற்று படத்திற்கு பின் இயக்குநர் சுதா கொங்காரா புறநாநூறு என்கிற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் முன்னதாக சூர்யா நடிக்க விருந்த நிலையில் ஒருசில காரணங்களுக்காக இப்படத்தில் இருந்து அவர் விலகினார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் டெஸ்ட் ஷூட் இன்று நடைபெற இருந்தது. ஆனால் தற்போது படப்பிடிப்பின் போது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன்


புறநாநூறு படத்தின் டெஸ்ட் ஷூட்டின் போது சிவகார்த்திகேயனிடம் அவரது தாடியை ட்ரிம் செய்ய சொல்லியிருக்கிறார் சுதா கொங்காரா. ஆனால் தாடி எடுக்க தேவையில்லை என்று முன்பு சுதா கொங்கரா சொன்னதாகவும் அவர் சொன்னபடிதான் வந்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் தான் தற்போது நடித்து வரும் படத்திற்காக தாடி வைத்துள்ளதால் அதை தன்னால் எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தாடி பார்க்க பருத்துவீரன் படத்தின் கார்த்தியின் தாடியை போல் இருப்பதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். உடனே கடுப்பான சிவகார்த்திகேயன் எதுவும் பேசாமல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பியுள்ளார். சுதா கொங்காரா எஸ்.கே வை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் சிவகார்த்திகேயன் அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை " என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் சமாதானத்தை எட்டும் வரை படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சூர்யா தற்போது சிவகார்த்திகேயன் என அடுத்து அடுத்து இரு பெரும் நடிகர்கள் படத்திற்குள் வந்தும் பிரச்சனைகள் தொடர்ந்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.