SM சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய குளித்தலையைச் சார்ந்த வினோத் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவர் 250 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி மாதாந்திர எழுச்சீட்டு நடத்தி மோசடி செய்து தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்கள் கரூர், தரகம்பட்டி, தோகைமலை, கடவூர், பெட்டவாய்த்தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேல்டு மற்றும் ஸ்ரீ முருகா சிட்ஸ் என்ற மாதாந்திர ஏல சீட்டு நிறுவனம் நடத்தினார். கடந்த தீபாவளிக்கு முன்பு இவர்கள் தலைமறைவாகின்றனர் இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தோகைமலை காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. தோகைமலையில் உள்ள காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கவில்லை. ஆயிரம் ரூபாய் ஒருவர் பணம் தரவில்லை என்றால் அதற்கு வழக்கு பதிவு செய்து கைது செய்யும் காவல்துறையினர்.
250க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் தங்களது மகன், மகள் திருமணத்திற்காகவும், கல்விச்செலவிற்காகவும் என பல்வேறு வகையில் சேமிப்பதற்காக மாதாந்திர சீட்டு ரூ.25000 முதல் ஒன்றரை லட்சம் வரை சீட்டு பணம் மாதாந்திர தொகையை செலுத்தி வந்துள்ளனர். இத்தொகையானது சுமார் ஒன்னரை கோடி ரூபாய் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறுவனம் செயல்பட்டு வந்த முகவரிக்கு சென்று பார்த்த போது பூட்டி இருந்தது. நிறுவனத்தின் ஊழியராக இருந்த செந்தில் குமார் சிவக்குமார் என்பவர்கள் ஒவ்வொரு மாதமும் மாத சீட்டுத் தொகையை வங்கிக் கணக்கு மூலமாகவும் ஜிபே மூலமாகவும் பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.
தற்பொழுது நிறுவனத்தை தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையை இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதற்கு காரணமாக சிட்ஃபண்ட் நடத்தி வந்த குளித்தலை முதலைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த வினோத் மற்றும் குளித்தலை காவல்காரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் காவல்காரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் நிறுவனத்தின் சேர்மன், கோவையைச் சார்ந்த அன்னூர் கீரநத்தம், சக்தி நகரைச் சார்ந்த கார்த்திக் ராஜா, கரூர் வடக்கு காந்திகிராமம் சாய்பிரேம் (கணக்காளர்), ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக் லோடு உரிமையாளர் பிரேமா நாகராஜ் மற்றும் வினோத்தின் மனைவி பிரபா, அவரது மைத்துனர்
கரூர் மாவட்டம் குப்பிச்சிபட்டியைச் சார்ந்த வேல்முருகன் அவரது மனைவி சுகன்யா, மைலாடியைச் சார்ந்த சந்திரசேகர், முதலைப்பட்டியைச் சார்ந்த வினோத்தின் சகோதரர் ஹரிஹரன் ஆகியோர் திட்டமிட்டு சீட்டு நடத்திய பணத்தை திருப்பிதராமல் மோசடி செய்து பாதிக்கப்பட்ட நபர்களை வந்த கொலை மிரட்டல் விடுவதாக கடந்த 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதி புகார் அளித்துள்ள நிலையில் மேற்படி மோசடி செய்த நபர்கள் மீது தோகைமலை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வரும் 4- ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்த காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.