நண்பன்
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் நண்பன். இந்தியில் ஆமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் நண்பன். ஜீவா , ஶ்ரீகாந்த் , இலியானா , சத்யராஜ் , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்தார்கள். 6 மாதத்தில் முடிய வேண்டிய நண்பன் திரைப்படம் ஒரு சின்ன பிழையால் 8 மாதம் நடைபெற்றதாக நடிகர் ஶ்ரீகாந்த் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோபத்தில் உச்சத்திற்கு செனற ஷங்கர்
" நண்பன் படத்தில் நான் தாடி வைத்து தாடி இல்லாமல் இரண்டு தோற்றத்தில் நடித்தேன். காலேஜ் காட்சிகளில் தாடி இல்லாமலும் மீதிக் காட்சிகளில் தாடி வைத்தும் நடித்தேன். ஒவ்வொரு முறை தாடி எடுத்தால் அது மற்படியும் வளர 21 நாள் காத்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த படம் முடிக்க அதிக மாதங்கள் ஆகியது. இல்லை என்றால் 3 மாதத்தில் படப்பிடிப்பு முடிந்திருக்கும். எனக்கு தாடி வளரும் வரை விஜய் வைத்து தனியாக சில காட்சிகளை எடுப்பார் ஷங்கர் இல்லையென்றால் எல்லாரும் காத்திருப்போம். க்ளைமேக்ஸ் காட்சி எடுக்க இருந்த முந்தைய நாள் நான் உதவி இயக்குநர் ஒருவரிடம் நான் தாடி வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்று கேட்டேந். அவர் காலேஜ் காட்சி தான் எடுக்கிறார்கள் அதனால் தாடி வேண்டாம் என்று சொன்னார். செட்டிற்கு போய் தாடி எடுத்தால் அதிக நேரம் ஆகும் என்று நான் வீட்டிலேயே க்ளீன் ஷேவ் செய்துவிட்டு போனேன். ஷங்கர் என்னைப் பார்த்தவுடம் அவரது முகம் மாறிவிட்டது. '
என்னவென்று அவரிடம் கேட்டபோது அவர் ரொம்ப கோபமாக பேசினார். ' நீங்க ஒரு சீனியர் ஆக்டன் நீங்க இப்டி பொறுப்பில்லாம நடந்துப்பீங்கனு நான் எதிர்பார்க்கல' என்று அவர் சொன்னதை கேட்டு எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. பிறகு தான் தெரிந்தது. அன்று க்ளைமேக்ஸ் காட்சி எடுக்க இருந்தார்கள் அதில் எனக்கு தாடி இருக்கவேண்டும். என்னிடம் தவறான தகவலை சொன்ன அந்த நபர் அந்த இடத்தில் வந்து மாற்றி பேசினார். நான் எதுவுமே சொல்லவில்லை. இந்த ஒரு காட்சிக்காக படகில் கிரேன், மற்ற பொருட்கள் எல்லாம் போட்டு ஒரு வாரம் கழித்து வந்து சேர்ந்தன . விஜய் , இலியான ஜீவா என எல்லாரது கால்ஷீட் எல்லாமே வேஸ்டானது. மொத்த படப்பிடிப்பும் கேன்ஸல் செய்தார்கள். மறுபடியும் எனக்கு தாடி வளரும் வரை மொத்த படக்குழுவே காத்திருந்தது. இதற்கு நடுவில் விஜய் எனக்கு கால் செய்து 'இப்படி செஞ்சிட்டியே' என்று கலாய்த்தார். நானே திட்டு வாங்கிவிட்டு சோகமாக இருக்கிறேன். இதில் நீங்க வேற இப்டி சொல்றீங்களேனு அவரிடம் சொன்னேன். 6 மாதத்தில் முடிய வேண்டிய படப்பிடிப்பு 8 மாதம் ஆனதற்கு இதுதான் காரணம்" என ஶ்ரீகாந்த் தெரிவித்தார்