காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிக்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவ மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இது போன்ற மின்தடைகள் ஏற்படுவதற்கு முன்பு இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுப்பதும், வழக்கமாக இருந்து வருகிறது.


மின்தடை - Kanchipuram Power Shutdown 


மின்தடை மேற்கொள்ளும்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவும் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் தரப்படும். அந்த வகையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 19.10.2024 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 


அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருகாலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.