சென்னையில் (மெட்ராஸ்) பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது அப்பா சித்தூரைச் சேர்ந்தவர். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிந்தார். அம்மா கும்பகோணம். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் ஒருவர் இருந்தார். அவர் டெங்குவால் இறந்தார், அந்த துயரம் தாங்க முடியாத ஸ்ரீகாந்த் சினிமாவில் கவனம் செலுத்தினார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எம்பிஏ பட்டதாரியான வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீகாந்த்:
ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் ரோஜா கூட்டம். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், பம்பர கண்ணாலே, பூ, சதுரங்கம், நண்பன் என்று ஏராளமான படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமான போது ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீகாந்திற்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை கொடுத்தன. இதன் காரணாமாக சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் போனது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இதனால், சரியான கம்பேக்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக தினசரி என்ற படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் பெரிய ரீச் கொடுக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் Erracheera என்ற படத்திலும் மற்றும் தமிழில் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
முதல் சம்பளம்:
சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாக ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்...ஸ்ரீகாந்த் தான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து பல வேலைகளை செய்து வந்ததாக கூறியிருக்கிறார். சின்னத்திரையில் அவர் நடித்துக் கொண்டிருந்த போது வாங்கிய முதல் சம்பளம் ரூ.750.
இந்த வாய்ப்புகளுக்கு முன், தன்னுடைய தேவைகளுக்காக பெட்டி கடையில் வேலை செய்திருக்கிறேன். கூல்டிரிங்க் விற்று இருக்கிறேன். இவ்வளவு ஏன் சர்வர் வேலை கூட செய்திருக்கிறேன் என கூறியுள்ளார். அதாவது நியூ இயர் டைமில், பாரில் சர்வர் வேலை பார்த்தால் 2500 ரூபாய் கிடைக்கும் அதனால் அங்கு போய் வேலை செய்வேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
அதே போல ஒரு காலத்தில், பைக், கார் இல்லாமல் நடந்து கூட போயிருக்கிறேன். இன்னிக்கு காரில் போகிறேன். பென்ஸ் கார்ல போனாலும் போவேன். அதைவிட எனக்கு பஸில் போகும் நிலை வந்தாலும் கூட தாராளமா போவேன் என தன்னுடைய ஏற்ற தாழ்வு குறித்து பேசியுள்ளார்.