அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் வெளியாகும் ’குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் BTS வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. அதோடு,’First Single' வெளியாகும் தேதி பற்றி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.


’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly )


விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு, அஜித் குமார், த்ரிஷா இருவரின் நடிப்பில் வெளியாகிறது ‘ குட் பேட் அக்லி’ திரைப்படம். ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இருவரின் நடிப்பு, கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.  ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிறாக காத்திருக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மாஸ் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ், க்ளாஸ் அஜித் குமாரை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இப்படத்தின் புகைப்படங்கள், போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி  ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.







BTS வீடியோ:


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அஜித்தின் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிரார். அதனால், சிறப்பான உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது டீசர் பார்த்தாலே தெரிகிறது.  அஜித் சினிமா வாழ்க்கையில், குட் பேட் அக்லி ஒரு  ம வித்தியாசமான படமாக இருக்கும் என்பது டீசரில் வெளிப்படுகிறது.  படம் முழுவதும் அஜித்தின் வெவ்வேறு கெட் அப்களில் அஜித்தை பார்க்க ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து காத்திருபதாக அவர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளை கடந்தது. இரண்டு வாரங்களில் 3.5 கோடி பார்வையாளை எட்டியுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குட் பேட் அக்லி படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  பில்லா, அமர்க்களம், தீனா கெட்டப்-களில் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் க்ளாசிக் அஜித் குமாரை திரையில் காணும் ஆவலில் உள்ளனர்.


‘குட் பேட் அக்லி’ டீசரின் மேக்கிங் வீடியோ, படப்பிடிப்பு காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளை கடந்துள்ளது. அஜித் குமார் மாஸான லுக்கில் டயலாக் பேசுவது, காட்சி அமைப்பு ஆகியவை இடம்பெறுள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.


கேங்ஸ்டராக வரும்  அஜித், தனது குடும்பத்திறாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அமையாக வாழ முடிவெடுக்கிறார். இருப்பினும், அவர் பல சாவல்களை எதிர்கொள்கிறார்.  பழிவாங்கல், விசுவாசம் மற்றும் அதிகாரத்தின் விலை ஆகியவை அடங்கிய கதை என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.


முதல் பாடல் எப்போது வெளியாகிறது?


குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் (first single 'OG Sambavam') வரும் மார்ச் 18-ம் தேதி வெளியாகும் என்று BTS வீடியோ இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மிரட்டியிருப்பது டீசரில் தெரிந்தது. அதோடு, BTS வீடியோவிலும் பின்னணி இசை புதுமையாகவும் கேங்ஸ்டர் படத்திற்கு தேவையானவும் இருந்தது. 


’குட் பேட் அக்லி’ படம் வெளியீடு எப்போது?


 இந்தப் படத்தில் அஜித்துடன் சுனில், பிரசன்னா, அர்ஜுன்தாஸ் ஆகிய பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.  ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைக்கதை பின்னணியில் உருவாகியுள்ள படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா என்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.  இந்த படத்தின் பாடல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பாத்திருக்கின்றனர்.