பிரபல மலையாள திரைப்படங்களான கும்பலங்கி நைட்ஸ், கபேலா, ஹோம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஸ்ரீநாத் பஷி. சமீபத்தில் வெளிவந்த அவரது 'சத்தம்பி' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தனியார் டிஜிட்டல் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பெண் தொகுப்பாளினியை அவதூறாக பேசிய வழக்கில் மரடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் தொகுப்பாளினியை அவதூறாக பேசியதற்காக அவர்மேல் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,கடந்த திங்கட்கிழமை அன்று போலீசில் ஆஜராக பஷி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அன்று ஆஜராகாமல் தட்டி கழித்துத்தார். மேலும் காவல்துறையினர் அவர் எதற்காக இந்த மாதிரி நடந்து கொண்டார் என்பதற்கான காணொளியை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் அவர் ரேடியோ ஸ்டேஷன் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணலில் இதே போல் தொகுப்பாளரை அவதூறாக பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியது. போலீசார் இந்த காணொளியையும் விசாரணைக்கு உள்ளாக்கி, இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
சத்தம்பி திரைப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணலின்போது, நடிகர் பஷி இரண்டு பெண் தொகுப்பாளர்களால் நேர்காணல் செய்யப்பட்டுள்ளார்.அந்த டிஜிட்டல் சேனல் தொகுப்பாளினி நடிகர் பஷியிடம் சக நடிகர்களை ரவுடித்தனத்தின்கீழ் வரிசைப்படுத்தச் சொல்லி கேட்டுள்ளார்.
முதலில் இந்த கேள்வியை திசை திருப்ப முயன்ற நடிகர் பஷி தொகுப்பாளர்களின் வற்புறுத்தலால் அவ்வாறு செய்ய முடியாமல் இருந்துள்ளார். அதன்பின் கேமராவை பார்த்து நான் கிளம்பலாமா என்று கேட்டுள்ளார். மேலும் தொகுப்பாளர்களிடம் இது போன்ற கீழ்த்தனமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். குழுவினர்களிடம் படம் பிடிப்பதையும் நிறுத்தச் சொல்லி கேட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை குறித்து அந்த சேனலிடம் விசாரித்த போது, கேமராவை அணைத்தபின் குழுவினரை நடிகர் பஷி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் பெண்களை அவமதிக்கும் வார்த்தைகள் உபயோகப்படுத்ததாகவும் கூறப்பட்டது. மேலும். இது குறித்து அவர்கள் கூறும் போது நாங்கள் ஆன்லைன் சேனல் என்பதால் பொதுவாக நடக்கும் நாட்டு நடப்பு செய்திகளைத் தவிர்த்து விட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தான் கவனம் செலுத்துவோம். படத்தின் ப்ரோமோஷன் குறித்து படக்குழுவினர் எங்களை அணுகும் போது, இந்த மாதிரி கேள்விகளையே பெரும்பாலும் விரும்புவார்கள் என்று கூறியுள்ளனர்.