குழந்தைகள் தினம்


வருடந்தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் படி  நவம்பர் 20 ஆம் தேதி தான் “உலக குழந்தைகள் தினம்” கொண்டாடப்பட்டது. ஆனால் 1964 ஆம் ஆண்டு பண்டிட் ஜவஹர்லால் நேரு மறைவுக்குப் பின் அப்போதைய அரசு அவரது பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று  குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 


திரையுலக பிரபலங்கள் வாழ்த்து






தமிழ் சினிமாவில் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்  “தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்“ என்று பதிவிட்டிருந்தார்.


சூரி வாழ்த்து






இதனைத் தொடர்ந்து நடிகர் சூரியும் தற்போது குழந்தைகள் தின வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். “குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதே குழந்தைகள் தினத்தில் நாம் கற்க வேண்டிய மிக முக்கியமான செய்தி.. குழந்தைகள் நம் எதிர்காலம், அவர்களுக்கு வளமான நலமான சமுதாயத்தை உருவாக்கி தருவது நம் ஒவ்வொருவரின் கடமை! நம்முள் இருக்கும் குழந்தைத் தனத்தையும் அவ்வப்போது வெளிக் கொண்டு வாருங்கள்... வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும். இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் குழந்தைகளுக்கு மத்தியில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் சூரி.


கொட்டுக்காளி


வெற்றிமாறன் இயக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தில்  நடித்துள்ள சூரி தற்போது பி எச் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கொட்டுக்காளி படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் ஷிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரித்த கூழாங்கல் திரைப்படத்தை இயக்கி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர் இயக்குநர் வினோத்ராஜ். மலையாள நடிகை அன்னா பென் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத் தக்கது.