மக்களவை தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 -ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலரும் ஆர்வமுடன்  முன்கூட்டியே வந்து வாக்களித்தனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் விஜய் , அஜித் , சூர்யா, கமல் ,, விக்ரம் , ரஜினிகாந்த் , உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

சூரி

 மக்களவை தேர்தலில் நடிகர் சூரி வாக்கு பதிவு செய்ய தனது மனைவியுடன் வாக்கு சாவடிக்கு சென்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டுப் போனதாக சூரி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். ”என்னுடைய ஜனநாயக கடமையை செய்ய நான் வாக்களிக்க வந்தேன் , ஆனால் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் விட்டுப்போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த தவறுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. வாக்களிக்காமல் திரும்பி செல்வது வருத்தமாக இருக்கிறது ஆனால் பொதுமக்கள் அனைவரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் “ என்று சூரி தெரிவித்துள்ளார்.

சூரி தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். இது தவிர்த்து குழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில்  நாயகனாக நடித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை இரண்டாம் பாகம் மற்றும் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் கருடன் படத்தில் நடித்து வருகிறார்.