”நம்பிக்கை விடாமுயற்சி” பெயிண்டர் டூ கதாநாயகன்... சூரியின் நெகிழ்ச்சி பதிவு
Actor soori : கிடைத்த கதாப்பாத்திரங்களில் எல்லாம் நடித்து பின்னர் காமெடியான உயர்ந்து பின்னர் ஹீரோவாக இன்று மாறியுள்ளார் நடிகர் சூரி

சினிமாவில் காமெடியனாக தொடங்கி தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சூரி.
தமிழ் சினிமாவில் கிடைத்த கதாப்பாத்திரத்தில் மூளையில் ஓரமாக தெரியும் ஒரு முகமாக இருந்த நடிகர் சூரி படிப்படியாக ஒரு காமெடி நடிகனாக ரசிகர்களை கவர ஆரம்பித்தார். அந்த வகையில் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் முன்னணி காமெடி நடிகரானார் சூரி. பின்னர் படிப்படியாக பல கஷ்டங்களை கடந்து முன்னேறி இன்று ஹீரோ அந்தஸ்தை எட்டியுள்ளார்.
Just In




வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமாகிய சூரி, நகைச்சுவை தவிர்த்து தன்னால் உணர்ச்சிகளை வெளிக்காட்டியும் நடிக்க முடியும் என்பதை விடுதலை படத்தில் நிரூபித்து காட்டினார். இதனை தொடர்ந்து தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி அடைந்தது.
இதையும் படிங்க: தனுஷ் நட்புக்காக ஜி.வி பிரகாஷ் செய்த செயல்...ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கலயா !
அதன் பின்னர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் சர்வதேச அளவில் இன்றுவரை விருதுகளை குவித்தது. அதன் பின்னர் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில் தனது கடந்த காலத்தை நினைவு கூறும் வகையில் நடிகர் சூரி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதில் “சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
கிடைத்த கதாப்பாத்திரங்களில் எல்லாம் நடித்து பின்னர் காமெடியான உயர்ந்து பின்னர் ஹீரோவாக இன்று மாறியுள்ளார் நடிகர் சூரி அவரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றால் அது மிகையாகாது.