மாமன்
விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்த சூரி அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். கருடன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் விடுதலை 2 திரைப்படம் நடிப்பு ரீதியாக அவருக்கு பாராட்டுக்களை சேர்த்தது. கடந்த ஆண்டு வெளியான கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றாலும் தமிழ் ரசிகர்களிடம் கவனமீர்க்கவில்லை. இப்படியான நிலையில் சூரி நடித்துள்ள ஃபேமிலி என்டர்டெயினர் படம்தான் மாமன்பிரசாந்த் பாணியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், மாஸ்டர்.
பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மெல்வின், திருச்சி அனந்தி, சாவித்திரி, சாரதா, தமிழ் செல்வி, ரயில் ரவி, உமேஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதை சூரியின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வொன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஹேஷம் அப்துல் வகப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மே 16 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய மாமன் திரைப்படம் குடும்ப ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வசூல் குவித்து வருகிறது.
மாமன் 10 நாள் வசூல்
மாமன் திரைப்படம் 10 நாட்களில் 28. கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் வாரத்தைக் காட்டிலும் இரண்டாம் வாரத்தில் படத்திற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. முன்னதாக சூரி நடித்த கருடன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தற்போது மாமன் திரைப்படமும் அவருக்கு பெரிய கமர்சியல் வெற்றிப்படமாக அமைந்துள்ளது
நகைச்சுவை நடிகராக தொடங்கி ஹீரோவாக சூரி நடிக்கத் தொடங்கியப்பின் பல விதமான கேள்விகள் சூரியை சூழ்ந்திருந்தன. ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றிபெற்ற சூரி தொடர்ந்து நாயகன் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்வாரா என்கிற கேள்வி அனைவரிடமும் இருந்தது. ஆனால் தன்னை மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதமான கதைகளை தேர்வு செய்வதில் சூரி கவனமாக இருந்து வருகிறார். அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தன்மீதான சந்தேகங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தது மட்டுமில்லாமல் ஃபேமிலி ரசிகர்களிடையே ஒரு நல்ல நடிகராகவும் வளர்ந்துள்ளார். சூரியின் படம் என்றால் விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் திரும்பி வந்துவிடும் என்கிற நம்பிக்கை வளர்ந்துள்ளது.