ராம் சரண் நடிக்கவிருக்கும் ஆர்.சி 15 படத்தை பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கவுள்ளார். ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு, ராம் சரண் நடிக்கவிருக்கும் பான் இந்திய படம் இதுதான். இப்படத்திற்கு பல எதிர்ப்பார்ப்புகள் உள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் டாப் நட்சத்திரங்களை வைத்து இப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
தற்போது, இப்படத்தில் நடிப்பு மான்ஸ்டர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற
செய்தி வெளியாகிவுள்ளது.
படக்குழுவினர் இவரை வரவேற்கும் படியான போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதே போல் ஆர் ஆர் ஆர் நாயகனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வரவேற்றார்.ஆர்.சி 15 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு வருகிறது. எஸ் தமன் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், ராம் சரணுடன் போட்டோ எடுத்து, ட்விட்டரில் ஷேர் செய்தார். சமீபத்தில், 1000 பேர் கொண்டு ஒரு பாட்டிற்கு ஷூட்டிங் நடந்தது. இப்பாடல், பல இடங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் நடிகர் ராம் சரண், இரட்டை வேடத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் என்றும் போலீஸ் மற்றும் மாணவர் ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் பேசப்படுகிறது.கபிர் சிங் நாயகி கியாரா அத்வானி இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சில நாட்களுக்கு முன்பு, ராம் சரண் அவரது இன்ஸ்டா பக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள காட் ஃபாதர் படத்தின் டீசரையும் பகிர்ந்துள்ளார்.