மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


நடிகர் சிவகுமார் பாராட்டு


நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இந்த திரைப்படத்தையும், இதில் நடித்த நடிகர்களையும் வெகுவாக பாராட்டி இருந்தனர். இந்நிலையில், நடிகர் சிவகுமார் இப்படத்தை புகழ்ந்து பகிர்ந்துள்ளார். அதில், தம்பி மாரி செல்வராஜுக்கு, மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி. பாதிக்கப்பட்டவன்தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும். திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்திய அளவில் முதலிடத்தில் மாமன்னன்


மானன்னன் திரைப்பட்டம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி பெற்றதை அடுத்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். மேலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர் நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து பாரட்டினர். இப்படி இந்த படத்தின் வெற்றி பெற்றதை படக்குழுவினர் பல்வேறு விதத்தில் கொண்டனர். 'மாமன்னன்' திரைப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் ஃபகத் ஃபாசில் (Fahadh Faasil) வீடியோக்கள்


இப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின் கேரக்டரை ஹீரோ போல் சித்தரித்து ஏராளமான மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன. எந்த பாடல் போட்டாலும் செட் ஆகும் விதமாக பகத் பாசிலின் வீடியோ அமைந்திருந்ததால், விதவிதமான பாடல்களை போட்டு எடிட் செய்து மீம் கிரியேட்டர்கள் இணையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த வீடியோவை பல்வேறு சாதியினரும் தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களை போட்டு வைரலாக்கி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க, 


Jailer Trailer: தலைவரு எப்போதுமே தாறுமாறு... ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த ‘ஜெயிலர்' ட்ரெய்லர்!


TN Weather Update: இனிமே மழைக்கு வாய்ப்பில்ல ராஜா.. கொளுத்தப்போகும் வெயில்.. இன்றைய வானிலை நிலவரம்..