நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களைத் தொடந்து  நடிகர் ரஜினிகாந்த்  நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நெல்சன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 


நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர்கள் மோகன்லால்,  சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,  யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி, மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.


சென்ற வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தமன்னா, மோகன்லால் தவிர இந்த ட்ரெய்லரில் மொத்த நட்சத்திரப் பட்டாளமும் இடம்பெற்றிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் காட்சிகள் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளின.


மேலும், அமைதியாக இருந்து ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் ஹீரோ, ரஜினிகாந்துக்கென ஃப்ளாஷ்பேக் காட்சி என பாட்ஷா படத்தை நினைவுபடுத்துவது போல்  இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்த நிலையில், தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லர் லைக்ஸ் அள்ளி வருகிறது.


இந்நிலையில், ஜெயிலர் ட்ரெய்லர் ஒரு கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ள சன் பிச்சர்ஸ்நிறுவனம், “இங்க அவரு தான் கிங்கு, அவரு வைக்கறதுதான் ரூல்ஸூ” எனப் பதிவிட்டுள்ளது.


 






ட்ரெய்லர் வெளியாகி 19 மணி நேரத்திலேயே ஜெயிலர் ட்ரெய்லர் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த  படத்துக்குப் பிறகு ஜெயிலர் படம் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வெளியாக உள்ளது.


வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில், அமெரிக்காவில் முன்பதிவு தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் விரைவில் முன்பதிவு  தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னதாக இப்படத்துக்கு சிறப்புக் காட்சிகள் எதுவும் இல்லை என அறிவிப்பு வெளியானது. மேலும் முதல் காட்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை  9 மணிக்கே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Web Movie Review: சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை சுவாரஸ்யம் கூட்டியதா... நட்டியின் ‘வெப்’ திரைப்படம் எப்படி இருக்கு?