நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி இன்று தங்கள் 13ஆவது திருமண நாளைக் கொண்டாடும் நிலையில் அவர்களுக்கு காலை முதலே பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Continues below advertisement


13 ஆண்டு திருமண வாழ்க்கை


தொலைக்காட்சியில் தன் பயணத்தைத் தொடங்கி வெள்ளித்திரையில் வெற்றிகரமாக நுழைந்து தன் வளர்ச்சியால் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.


ஒருபுறம் தன் கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன் அதே காலக்கட்டத்தில் தன் உறவுக்காரப் பெண்ணான ஆர்த்தியை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், இருவரும் அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் இன்று 13ஆவது திருமண நாளைக் கொண்டாடும் சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்திக்கு க்யூட்டான வாழ்த்துச் செய்தியை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “சந்தோஷக் கண்ணீரே... நமக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு மனைவியுடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


 






இந்நிலையில் இருவரையும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வாழ்த்தி கமெண்ட் செக்‌ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.


சிவகார்த்திகேயனின் பயணம்


மிமிக்ரி கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், தொலைக்காட்சியில் மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக உருவெடுத்துள்ளதுடன், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘3’ படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.


தொடர்ந்து 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜின் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம்கொத்தி பறவை, எதிர் நீச்சல் என படிப்படியாக கவனமீர்க்கும் வெற்றிப்படங்களைக் கொடுத்து தனக்கென தன் ரசிகர் பட்டாளத்தைப் பிடித்தார்.


அடுத்த படம் என்ன?


படிப்படியாக சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது தன் SK 23 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 


முன்னதாக சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம்  சூப்பர் ஹிட் படமாக அமைந்து 100 கோடிகள் வசூலைக் கடந்தது. மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரவேற்பைப் பெற்று ஸ்ட்ரீமாகி வருகிறது.