Just In





கண்டிப்பா ஜெயிப்பீங்க...அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
துபாயில் நடைபெறும் கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

அஜித் குமார்
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் வாழ்க்கையில் களமிறங்க இருக்கும் அதே நேரம் நடிகர் அஜித்தும் திரை வாழ்க்கையை விட்டு ரேஸிங்கில் களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது துபாயில் நடைபெறும் கார் பந்தையத்தில் கலந்துகொண்டுள்ளார். அஜித் குமார் ரேஸிங் குழுவின் தலைவராகவும் போட்டியாளராகவும் இந்த போட்டியில் அவர் கலந்துகொண்டுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் 24H மிச்லின் கார் பந்தையம் வரும் செப்டம்பர் மாதம் வரை தொடர இருக்கிறது. இது தவிர்த்து அடுத்தபடியாக ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் மற்றும் அவரது குழு கலந்துகொள்ள இருக்கிறது.
சினிமாவில் நடிக்க மாட்டேன்
ஒருபக்கம் சினிமா இன்னொரு பக்கம் ரேஸ் என இரண்டையும் அஜித் எப்படி சமாளிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தபோது அஜித் இப்படி கூரியுள்ளார் " நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்ல தேவையில்லை. ஒரு டிரைவராக மட்டுமில்லாமல் நான் அஜித் குமார் ரேஸிங் குழுவின் உரிமையாளர் என்பதால் நான் போட்டி காலத்தில் சினிமாவில் நடிக்க மாட்டேன். வரும் அக்டோபர் முதல் மார்ச் வரை படங்களில் நடித்து அதன் பின் போட்டியில் என்னுடைய முழு கவனத்தை செலுத்துவேன்" என அஜித் தெரிவித்துள்ளார்.
அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவதை பல திரைத்துறையினர் வரவேற்றார்கள். அதேபோல் அஜித் கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்கு பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சமீப காலத்தில் அஜித் பற்றி நிறைய பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
" உங்களின் லட்சியம் மற்றும் அதற்கான அர்பணிப்பும் எங்களை தொடர்ந்து இன்ஸ்பயர் செய்து வருகிறது. இந்த முயற்சியிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்" என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்