ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியை தேர்வு செய்ய பிசிசிஐ ஐசிசியிடம்  கூடுதல் அவகாசம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: 

உலகின் டாப் 10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் ஹைபிரிட் மாடல் முறையில் நடைப்பெற உள்ளது. இதில் இந்திய அணி பங்கு பெறும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகளை ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் இந்திய அணி இன்று( 11.01.25) அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இதையும் படிங்க: இந்தி தேசிய மொழி அல்ல என அஸ்வின் கூறியது சரிதான் - ஒப்புக்கொண்ட அண்ணாமலை!

நேரம் கேட்கும் பிசிசிஐ: 

இந்த நிலையில் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை அறிவிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ-யின் உள்விவகாரங்கள் மற்றும் ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றின் காரணமாக பிசிசிஐ இந்திய அணியை  அறிவிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறியுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி வருகிற ஜனவரி 18-19 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியுடன் சேர்த்து இங்கிலாந்து அணி உடனான ஒருநாள் தொடருக்கான அணியும் சேர்த்து அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கடைசி பயிற்சி:

அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 அணியும் வங்கதேசத்துக்கு எதிராக அறிவிக்கப்பட்டது போல இளம் அணியாக இருக்கும் என்று எதிர்ப்ப்பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியின் மூத்த பந்து வீச்சாளர்களான ஜஸ்பீரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது. 

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் சமி இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதே போல டி20 போட்டிகளில் கலக்கிவரும் அர்ஷ்தீப் சிங்-க்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக நடைப்பெறும் இந்த ஒரு நாள் தொடர் ஒரு நல்லப்பயிற்சியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

இதையும் படிங்க: Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?

இந்திய உத்தேச அணி: 

தொடக்க ஆட்டக்காரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

மிடில் ஆர்டர்: விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்

ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா

ஸ்பின்னர்கள்:  வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல்

வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்