நடிகர் சிவகார்த்திகேயன் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பெண் வேடமிட்டு ஆடும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் சிவகார்த்திகேயன். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மான் கராத்தே, எதிர்நீச்சல், ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, ஹீரோ, டாக்டர், பிரின்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். 


சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளிலும் அவர் தன்னை மெருகேற்றி கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், கடந்த ஜூலை 14 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பரத் ஷங்கர் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை வசூலில் ரூ.89 கோடி வரை கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


மாவீரன் படம் அமேசனான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாகவுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு நிச்சயம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால்  ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்திலும் சிவா நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார். 






இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன்  தான் நடித்த ‘ரெமோ’ படத்தில் பெண் வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். ஆனால் அவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் ஆடிய போது பெண் வேடத்தில் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.