நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களையே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களும் அதிக கவனம் பெறும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இரண்டு புதிய படங்கள் ரிலீசாகியுள்ளது. ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ், மற்றொன்று கார்த்தி நடித்த சர்தார்.
இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரின்ஸ் படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் முதல் தீபாவளி ரீலிசாக அமைந்துள்ளது. தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள பிரின்ஸ் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படம் ரிலீசாகியுள்ளது.
அதிகாலையிலேயே படம் பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர். மீண்டும் ஒருமுறை ஜாலியான, குடும்பங்களுக்கு பிடிக்கும் சிவகார்த்திகேயனை தியேட்டரில் பார்க்கலாம் என கூறியுள்ளனர். மேலும் தன்னுடைய முதல் தீபாவளி ரிலீஸ் என்பதால் இப்படத்தை ஆவலுடன் சிவகார்த்திகேயன் எதிர்பார்த்து காத்திருந்தார். இதனையே தனது பல நேர்காணல்களிலும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் இணைந்து ப்ரின்ஸ் படம் பார்க்க சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு தனது மனைவி ஆர்த்தியுடன் வருகை தந்தார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.