வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தை இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.


பல தடங்கல்களுக்கு பின் வெளியான இப்படம் பெரும் ஹிட் ஆகியுள்ளது. இதுவரை இப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைய இருக்கும் சூழலிலும் தற்போதுவரை பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 




இதை முன்னிட்டு, கடந்த 21-ஆம் தேதி சென்னையில் மாநாடு படத்தின் வெற்றிவிழா கூட்டம் நடந்தது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே சூர்யா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். 


ஆனால் சிம்பு மட்டும் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வேறொரு பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், கோலிவுட்டில் தனக்கு கம்பேக் கொடுத்த படத்தின் வெற்றி விழாவில் சிம்பு நிச்சயம் கலந்துகொண்டிருக்க வேண்டும் என பலர் கூறிவருகின்றனர். 




விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஏ. சந்திரசேகரனும், இந்தப் படம் சிம்புவுக்கு ஒரு பெரிய திருப்புமுனை. இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும் என பேசியிருந்தார்.


 






இதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஸ் யூ எஸ்டிஆர். லவ் யூ சோ மச் மை அப்துல் காலிக்” என குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், மாநாடு படம் வெற்றியடைந்ததை அடுத்து நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் ஒரு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவானது ஜனவரி 6ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை சிம்பு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Venkat Prabhu | "மிஸ் யூ சிம்பு" "லவ் யூ அப்துல் காலிக்” - வெங்கட் பிரபு பதிவிட்ட எமோஷ்னல் போஸ்ட்