தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 42ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு 4 படங்களின் அப்டேட்டுகள் வெளியிடப்பட்டது. சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 48ஆவது படமான தக் லைஃப் படத்தின் போஸ்டர் வெளியானது. 49ஆவது படத்தை இயக்குநர் ராம் குமார் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிம்புவின் 50ஆவது படம் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சிம்புவே இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக சிம்புவின் 51ஆவது படம் குறித்தும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குநார் என்று அறிவிப்பு வெளியானது. மேலும், இந்தப் படத்திற்கு God of Love என்று டைட்டில் வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

கடவுள் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற கதையை மையபடுத்தி இந்தப் படம் உருவாகும் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கடவுளாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக சிறந்து விளங்கி வருகிறார். இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது 42 வயது வரை சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.
குழந்தைப் பருவம் முதல் சினிமாவில் நடித்து வரும் சிம்பு அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவது வழக்கம். ஏற்கனவே கோலிவுட்டில் நட்சத்திர நடிகரின் மகளை காதலித்து வந்த நிலையில் இளம் ஹீரோவின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரை விட்டு பிரிந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு வல்லவன் படம் மூலமாக நயன்தாராவுடன் காதல் வலையில் விழுந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் அப்போது சில அந்தரங்க போட்டோஸ் வெளியான நிலையில் இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர்.
நயன்தாரா உடனான காதல் தோல்விக்கு பிறகு வாலு படம் மூலமாக ஹன்சிகாவை காதலித்தார். இவர்களது காதல் உறவு அடுத்தகட்டத்திற்கு செல்ல இருந்த நிலையில்,இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். கடைசியில் சிம்புவிற்கும் த்ரிஷாவிற்கும் திருமணம் என்று கூறப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. இதற்கிடையில் சிம்புவின் சகோதரர் மறுறும் சகோதரிக்கு இருவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தான் ஈஸ்வரன் படம் மூலமாக தமிழில் அறிமுகமான 32 வயதான நடிகை நிதி அகர்வால் மீது காதல் வயப்பட்டு அவரை காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங்கில் செய்து வருவதாகவும் தகவல் பரவியது. அதுமட்டுமின்றி இந்த காதலாவது திருமணம் வரை செல்ல வேண்டும் என்று அவர்களது பெற்றோரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்பட்டது. எனினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. அப்படியிருக்கும் போது இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என்று தெரிகிறது.
தற்போது சிம்பு தனது படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் ஹாசன், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.