பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 17 மாணவர்கள் பலி! எப்படி?

ஜம்ஃபாரா மாநிலத்தின் கௌரா நமோடா மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பயிலும் மதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

Continues below advertisement

 

Continues below advertisement

நைஜீரியாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்ஃபாரா மாநிலத்தின் கௌரா நமோடா மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பயிலும் மதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கு மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி மதப்பாடம் கற்று வந்தனர்.

இந்நிலையில் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு 100 மாணவர்கள் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுடன் வந்த மீட்புக்குழுவினர் தீயில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் இந்த தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயடமைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு இரங்கல் தெரிவித்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பள்ளிகளை வலியுறுத்தினார்.

நைஜீரியாவில் பள்ளிகளில் தீ விபத்துகள் ஏற்படுவது சாதாரண விஷயமல்ல, ஆனால் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்களைப் பாதுகாப்பதற்காக 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நைஜீரியாவின் பாதுகாப்பான பள்ளி முன்முயற்சியின் கீழ் பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசாங்கம் தவறியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம், நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவின் புறநகரில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola