தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் சிலம்பரசன் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்த ‘தொட்டி ஜெயா’ படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு 


தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான சிலம்பரசன் குழந்தையாக இருக்கும்போது இருந்து நடித்து வருவதால் அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் லவ் கதைகளில் நடித்த சிம்புவை மிக வித்தியாசமாக காட்டிய படம் ‘தொட்டி ஜெயா’ . வி.இசட்.துரை இயக்கிய இந்த படத்தில் சிலம்பரசன், கோபிகா, பிரதீப் ராவத், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜாவும், மற்ற பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜூம் இசையமைத்திருந்தனர். 


படத்தின் கதை 


யாரும் இல்லாத சிம்பு,  குப்பைத் தொட்டியில் இருந்து எடுக்கப்படுவதால், அவருக்கு "தொட்டி ஜெயா" என்ற பட்டப் பெயர் உள்ளது. தான் வேலை செய்யும் இடத்தில் உரிமையாளருடன் தகராறில் ஈடுபடும் ஒருவரை அடித்து விரட்டுகிறார். இதனால் அவருக்கு பணத்தை கொடுத்து மக்கள் பயப்படுபவர்களை மட்டுமே மதிப்பார்கள் என சொல்கிறார். இதனைக் கேட்டு சிம்பு அங்கிருந்து சென்னைக்கு வருகிறார். அங்கு பிரதீப் ராவத்திடம் உதவியாளராக இருக்கும் அவர், ஒரு சம்பவத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க கொல்கத்தாவுக்கு சென்று தலைமறைவாகிறார்.


 இதற்கிடையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த கல்லூரிப் பெண் கோபிகா, தனது தோழிகளுடன் அங்கு சுற்றுலா வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவப்பு விளக்கு பகுதியில் ஒரு கும்பலிடம் சிக்குகிறார். அங்கிருந்து தப்பிக்க முயலும் போது சிம்புவை சந்திக்கிறார். கோபிகாவுக்கு உதவி செய்து அவரை பத்திரமாக கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்கிறான். ரயிலில் திரும்பும் வழியில் கோபிகாவுக்கு சிம்பு மேல் காதல் ஏற்படுகிறது. 


அவரின் காதலை சிம்பு ஏற்றுக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அப்போது தான் கோபிகா பிரதீப் ராவத்தின் மகள் என்பது தெரியாமல் அவரின் கோபத்தை சிம்பு சம்பாதிக்கிறார். . தொட்டி ஜெயா பிருந்தாவை அவளது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று சீனா தானாவின் கோபத்தை சம்பாதித்தாள். இதனால் கோபமடைந்த பிரதீப் ராவத் தனது ரவுடி கும்பலை வரவழைத்து சிம்புவை கொலை செய்ய சொல்கிறார். இந்த கும்பலிடம் இருந்து தப்பி கோபிகாவை சிம்பு திருமணம் செய்வாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.   


தொட்டா பவருடா


இந்த படத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக ‘தொட்டா பவருடா’ , ‘உயிரே என் உயிரே’ ஆகிய பாடல்கள் அமைந்தது. இதில் தாடியுடன் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்புவை பார்த்த ரசிகர்கள் வியந்து தான் போயினர். இந்த படத்தில் நடிக்க முதலில் ஹீரோவாக ஜீவன் தான் நடிக்க வேண்டியது. அதன்பின்னரே சிம்பு உள்ளே வந்தார். அதன்பிறகு ஹீரோயினாக நயன்தாரா நடிக்க அணுகப்பட்டது. பின் கோபிகா நடிக்க வந்தார். தொட்டி கஜா  என்பது தான் இந்த படத்துக்கு வைக்கப்பட்ட முதல் பெயர், இது தொட்டி ஜெயா என மாற்றப்பட்டது.