நாள் - 09.09.2023 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை 


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல்  காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒற்றுமையான சூழல் ஏற்படும். வியாபாரப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


ரிஷபம்


குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வித்தியாசமான பொருட்களின் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். புதிய நபர்களின் மூலம் மாற்றம் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.


மிதுனம்


மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். இணையதளம் சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.


கடகம்


சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களில் முன்னேற்றம் ஏற்படும். சமூகப் பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் தாழ்வுமனப்பான்மையின்றி செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உதவிகள் கிடைக்கும் நாள்.


சிம்மம்


புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. இறை வழிபாட்டுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆபரணங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.


கன்னி


எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.


துலாம்


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். சர்வதேச வணிகத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வரவுகள் மேம்படும் நாள்.


விருச்சிகம்


உத்தியோக பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கால்நடை பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உழைப்பு மேம்படும் நாள்.


தனுசு


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.   வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அன்பு நிறைந்த நாள்.


மகரம்


மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் புதுமையான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆசைகள் நிறைந்த நாள்.


கும்பம்


சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பாரம்பரியம் தொடர்பான தேடல் உண்டாகும். எதையும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். புரிதல் நிறைந்த நாள்.


மீனம்


பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். கல்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.