நடிகர் சிலம்பரசன் தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் பத்து தல படம் வெளியாகியிருந்தது. இந்த படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அடுத்ததாக சிம்பு வெந்து தணிந்தது காடு-2, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் என தொடர்ந்து நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 






இதற்கிடையில் நடிகர்  சிலம்பரசன் இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். அப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்டனர். அனைவருடனும் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு சிம்பு, பிரியாணி விருந்து கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.