வெந்து தணிந்தது காடு படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 






விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


முன்னதாக இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என  கூறப்பட்டது.அந்த வகையில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் இசை நிகழ்ச்சி நடத்த சிம்புவின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். 






மேலும் நடிகைகள் ராதிகா,ராஷிகண்ணா,  நடிகர்கள் ஜீவா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். தொடர்ந்து படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, நான் இந்த நேரத்துல எல்லா பெற்றோர்கள் கிட்டயும் ஒரு விஷயம் கேட்டுக்குறேன். பசங்கல கல்யாணம் கல்யாணம்ன்னு சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க....அவர்களை ஃப்ரீயா விடுங்க..இந்த சமுதாயம் கொடுக்க அழுத்தத்தால சில தப்பான கல்யாணமும் நடக்குது. அதனால பசங்க முதல்ல வாழ்க்கையை வாழட்டும். யார் நமக்கு சரியாக இருப்பார்கள்..இல்லன்னு...எல்லாத்தையும் மீறி மேலே ஒருத்தர் இருக்காரு. அவரா பார்த்து அனுப்புவாரு. அதுவரை அமைதியா வெயிட் பண்ணுறது நல்லதுன்னு நினைக்கிறேன் என தெரிவித்தார்.


இதேபோல் ரசிகர்களிடம் அப்பா அம்மாவை பாத்துகோங்க...கடைசி காலத்துல மட்டுமல்ல என்றைக்கும் அவர்களை கை விட்றாதீங்க... என தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.