Silambarasan : காதல் திருமணத்திற்கு தயாராகிறார் சிம்பு...யார் அந்த லக்கி வுமன் தெரியுமா?

நடிகர் சிலம்பரசன் நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

சிலம்பரசன்

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன் காதல் உறவில் இருந்து பிரிந்தவர் சிலம்பரசன். நயன்தாரா ,  ஹன்சிகா  உடனான காதலை வெளிப்படையாக அறிவித்தார். மேலும் த்ரிஷா  வரலட்சுமி என சிம்பு காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் பட்டியல் நீண்டது.  தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரை வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொண்ட சிம்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கம்பேக் கொடுத்து வருகிறார்.  மாநாடு , வெந்து தணிந்தது காடு ஆகிய இரு படங்கள் அவருக்கு நல்ல வெற்றிபடமாக அமைந்தன. 

Continues below advertisement

சிம்பு நிதி அகர்வால் திருமணம்

திரைவாழ்க்கையில் சீரான பயணத்தை தொடர்ந்து வரும் சிம்பு தற்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அடுத்தகட்டத்திற்கு நகர இருக்கிறார். கோலிவுட்டின் பேச்சுலர்களின் ஒருவரான சிம்புவும் நடிகை நிதி அகர்வாலும் காதலித்து வருவதாக சமீப காலங்களில் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்தி , தமிழ் , தெலுங்கு , தமிழ் என அனைத்து மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வரும் நிதி அகர்வால் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.

சினிமா தவிர்த்து தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிதி அகர்வால் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் தனது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. அசோக் செல்வன் , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.


மேலும் படிக்க : Watch Video: நீயெல்லாம் முன்னாடி வரலாமா? முதியவரை நெஞ்சிலே குத்திய சிவாஜியின் மகன்!

Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா

Continues below advertisement
Sponsored Links by Taboola