பிஸியாக நடித்து வந்த சிம்பு திரையுலகுக்கு ஒரு கேப் விட்டார்.  கோலிவுட் சினிமா துறையில் பல பிரச்னைகளிலும், விமர்சனங்களிலும் அடிபட்டார் சிம்பு. அடுத்த படங்களின் தோல்வி, ஷூட்டிங்குக்கு வருவதில்லை, மனக்கவலை , உடல் எடை என அடுத்தடுத்த விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் சிம்பு. அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு ATMAN என சமூக வலைத்தளங்களில் தன்னை குறிப்பிட்டார் சிம்பு . சிம்பு தனது உடல் எடையை குறைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான  ஈஸ்வரன் திரைப்படத்தில் கம் பேக் கொடுத்தார். 






 


படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . எதிர்பார்த்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை. இருந்தாலும் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக களமிறங்கியதை கண்ட ரசிகர்கள் சிம்புவை கொண்டாடினார்கள். அதன் பிறகு மாநாடு படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.  தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்திருக்கும் சிம்பு, காதலிலும் சிக்கியதாக தகவல் கசிந்தது. ஏற்கெனவே நயன்தாரா, ஹன்சிகா என்ற நடிகைகளுடன் காதல் பேச்சில் அடிபட்ட சிம்பு தற்போதும் நடிகை ஒருவருடன் காதலில் இருப்பதாக கோலிவுட் கிசுகிசுத்தது.






சிம்பு  ஈஸ்வரன் படத்தின் நாயகி நிதி அகர்வாலை சிம்பு காதலித்து வருவதாக கூறப்படுகிறது. நிதி அகர்வால் மற்றும் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்தே காதலித்து வருகிறார்களாம். இரண்டு வருடங்களாக ஸ்ட்ராங்காக செல்லும் இவர்கள் காதல் தற்போது லிவ்வின் ரிலேஷன்ஷிப் வரை சென்றிருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. 
இந்நிலையில் கல்யாண தகவலில் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. மிக விரைவில் திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக சிம்பு - நிதி ஜோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கண்டிப்பாக 2022ம் ஆண்டில் திருமணத்தை முடித்துவிட இந்த ஜோடி முடிவு செய்திருப்பதாகவும் கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது. இதனால் அடுத்த சினிமா ஜோடி தயாராகிவிட்டதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.


நிதி அகரவால் ஈஸ்வரன், பூமி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இது தவிர பாலிவுட், தெலுங்கு படங்களிலும் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார்.