புஷ்பா 2


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. 4 நாட்களில் உலகளவில் ரூ 829 கோடி இப்படம் வசூலித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் 1000 கோடி வசூலிக்க இருக்கிறது. பிரபாஸ் நடித்த கல்கி படத்திற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டில் 1000 கோடி வசூலித்த இரண்டாவது படம் புஷ்பா. அதே நேரத்தில் அதிவேகமாக 1000 கோடி வசூல் எடுத்த முதல் இந்திய படம் என்கிற சாதனையை படைக்க இருக்கிறது புஷ்பா 2 .


புஷ்பா 2 படத்தை விமர்சித்த நடிகர் சித்தார்த்


புஷ்பா 2 படத்திற்கு தென் இந்தியாவில் மட்டுமில்லாமல் வட இந்தியாவில் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பாட்னாவில் நடந்த  புஷ்பா 2 படத்தின் டிடைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டது பேசுபொருளாகியது. இந்த நிகழ்வை குறிப்பிட்டு நடிகர் சித்தார் புஷ்பா 2 படம் பற்றி பேசியுள்ளது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. மதன் கெளரியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் பாட்னாவில் புஷ்பா 2 படத்திற்கு கூடிய கூட்டம் பற்றி பேசியபோது இப்படி கூறியுள்ளார் " இந்தியாவில் கூட்டம் கூடுவது ஒரு பெரிய விஷயம் இல்லை. கட்டுமான பணிகளுக்காக ஒரு ஜே.சி.பி கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும். பீஹாரில் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கு மார்கெட்டிங் தான் காரணம். அதற்கான ஒரு பாட்டு , ஒரு பெரிய மைதாம் எல்லாம் ஏற்பாடு செய்தால் கூட்டம் கூடும் . இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பதந்தம் கிடையாது. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சிக்கும் தான் கூட்டம் கூடுது எல்லாம் அரசியல் கட்சி ஏன் ஜெயிக்கல. கரகோஷம் வாங்குவது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் கிடையாது . கரகோஷம் வாங்குவது ரொம்ப ஈஸி. அப்படி பார்த்தால் கரகோஷம் வாங்கிய அரசியல் கட்சி எல்லாம் ஆட்சிக்கு வந்திருக்கனுமே" 


சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ திரைப்படம் புஷ்பா 2 படத்திற்கு ஒரு வாரம் முன்னதாக திரையரங்கில் வெளியாக இருந்தது. பின் மழை காரணமாக படத்தின் ரிலீஸ் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.