'விருச்சக ராசி' புத்தாண்டு ராசிபலன் 2025:
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே, கடந்த 2024 குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணித்திருப்பார். பிப்ரவரி ஏழு வரை ஆறாம் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். கலவியான பலன்களை தான் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். தற்போது எதிரியின் பிடியில் இருக்கும் நீங்கள் 2025 இல் விடுபட்டு சொந்தமாக முயற்சி எடுத்து வெற்றி பெறப் போகிறீர்கள். உங்களுடைய வலிமை நிச்சயமாக பல மடங்கு அதிகரிக்கும். வருமானமானது யாரிடத்திலும் பெரிதாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தனித்து நின்று சாதிப்பவர் நீங்கள். சுருக்கமாக 2025 உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
குரு பெயர்ச்சி:
பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இடம் நிலம் தொடர்பான சிக்கல்களை நீங்கள் சந்தித்தாலும், விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். சாதிக்கத் துடிக்கும் உங்களுக்கு எதிர்காலம் சிறப்பாக தான் அமையும். பொருளாதார ரீதியில் நீங்கள் சிக்கல்களை சந்தித்தாலும், அதிலிருந்து தீர்வு காண போகிறீர்கள். எப்படியான பெரிய எதிரிகள் உங்களை நோக்கி வந்தாலும் அவர்களை தவிடு பொடியாக்க போகிறீர்கள்.
குருவின் பார்வை பத்தாம் வீட்டில் பார்ப்பதால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆனால் அடுத்த கட்ட நகர்விற்காக நீங்கள் ஓடிக்கொண்டே இருப்பதால் சற்று இளைப்பாற நேரம் தேவை. பிப்ரவரி ஏழுக்கு பிறகு மே மாதம் வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழிலிருந்து நல்ல பெரிய முன்னேற்றத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப் போகிறார். முகத்தில் பொலிவு கூடும். மனதில் தெம்பு பறக்கும். பல புதிய முயற்சிகளில் வெற்றியை காண்பீர்கள்...
ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் குரு:
அஷ்டமத்தில் குரு பகவான் பயணிப்பதால் பெரிய பிரச்சனை ஒன்றும் உங்களுக்கு ஏற்பட்டு விடாது. இடம் மாறுதல், வீண் அலைச்சல் போன்ற சில அசௌகரிமான காரியங்கள் மட்டுமே நடைபெறும். குடும்பத்தை விட்டு வேலைக்காக சற்று தொலைதூரப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். சிலர் குடும்பத்தோடு வெளியூர், வெளிநாடுகளில் தங்கி சுற்றுலாவிற்காகவோ அல்லது வேலைக்காகவும் இருக்க வேண்டிய சூழல் வரலாம்.
அஷ்டமத்து குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் பதிவாவதால் வீண் விரயங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படும். நான் ஏற்கனவே சொன்னது போல நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்ள 12 ஆம் அதிபதி உங்களுக்கு உதவுவார். வீட்டில் இருக்கும் குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டை பார்வையிடுவதால் புதிய வாகனம் வாங்கி மகிழுங்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு செல்ல வாய்ப்பு உண்டு.
வீடு மாற்றம் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பெரிய மனிதர்களின் தொடர்பு எட்டும். தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கூட உங்களுக்கு சாதகமாக மாற வாய்ப்புண்டு எந்த காரியத்தை நீங்கள் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். எட்டாம் இடம் என்பது பத்தாம் இடத்திற்கு லாப ஸ்தானம் என்பதால் நீங்கள் செய்யாத வேலைக்கு கூட நல்ல வருமானத்தை பெற வாய்ப்பு உண்டு. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
ராகு கேது பெயர்ச்சி:
இதுநாள் வரையில் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் இருந்த கேது, தற்போது பத்தாம் வீட்டை நோக்கி நகர்கிறார். குறிப்பாக அரசு உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். கேது ஒட்டுமொத்தமான தடைப்பட்ட காரியங்களை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபடுவார். நீங்கள் ஆன்மீகத்தில் மனதை செலுத்தும் போது உங்களுடைய தடைகள் விலகி நல்ல முன்னேற்றமான பாதையில் நடத்திச் செல்வார். அதேபோல நான்காம் இடத்தில் இருக்கும் ராகு நீங்கள் ஒரு ஊரில் இருந்தால் வேறு ஊருக்கு உங்களை கொண்டு செல்ல வாய்ப்புண்டு. அதுவும் வேலைக்காகவும் இருக்கலாம். ஆகவே, விருச்சிக ராசி அன்பர்களே தயாராக இருங்கள் இடப்பெயர்ச்சிக்கு...
10ம் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய்:
அன்பார்ந்த வாசகர்களே ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து சில தடைகளை ஏற்படுத்தி இருப்பார். ஆனால் உங்கள் ராசி அதிபதி நீச்சத்தில் பயணித்தாலும் பெரிய பாதிப்புகளை உங்களுக்கு கொடுத்து விட்டு போக மாட்டார். அதேபோல வருடத்தின் பிற்பகுதியில் செவ்வாய் சிம்மத்திற்கு வரும் பொழுது இழந்தவைகளை நீங்கள் மீண்டும் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனதிற்கினிய பல சுப காரியங்கள் வீட்டிலேயே நடைபெறும். பொருளாதார முன்னேற்றம் நிச்சயமாக உண்டு.
கேதுடன் சேரும் ராசி அதிபதி சாதனைகளை புரியவதற்கான ஏற்பாடுகளை செய்வார். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்களை கொண்டு வருவார். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நான்காம் இடத்தில் இருக்கும் ராகு , பெரிய பெரிய கனரக வாகனம் வாங்குபவர்களுக்கோ அல்லது டிரான்ஸ்போர்ட் தொழில் செய்பவர்களுக்கோ சிறப்பான முன்னேற்றத்தை கொண்டு வரும்.