நடிகர் சித்தார்த் மீண்டும் பிரபல நடிகை ஒருவருடன் காதலில் விழுந்துள்ளதாக வெளியான தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த அவர், தயாரிப்பாளர், பாடகர் , திரைக்கதை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்டவராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் இவற்றையெல்லாம் விட சமீப காலமாக சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்காக குரல் கொடுத்து சர்ச்சைகளில் சிக்கினார். 


இதனிடையே சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ்வும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிதி மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், மிஷ்கினின் பிசாசு, துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ்குமார் நடித்த ஜெயில் படத்தில் நடிகர் தனுஷூடன் இணைந்து காத்தோடு காத்தானேன் பாடலை பாடியுள்ளார். இவரும் சித்தார்த்தும் மகா சமுத்திரம் படத்தில் ஒன்றாக நடித்தனர். 




அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாகவும்,தற்போது டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் மும்பையில் உள்ள முடி திருத்தும் கடை ஒன்றில் இருந்து வெளியே வந்த அதிதி ராவை சிலர் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அவர்களை அதிதியை தொடர்ந்து பின்னால் வந்த சித்தார்த் தடுத்து நிறுத்தியதாகவும், இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்க வேண்டாம் என அவர் சொன்னதாகவும் கூறப்படுகிறது. 


அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஆனால் தங்களை பற்றிய காதல் வதந்திகளுக்கு இருவருமே இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏற்கனவே மனைவியைப் பிரிந்த சித்தார்த்தும், நடிகை சமந்தாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு  தீவிரமாக காதலிக்க தொடங்கினர். இருவருக்கும் திருமணம் தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சித்தார்த் குறித்து சில தகவல்கள் தெரிய வந்ததால் சமந்தா அவரை பிரிந்தார். 


இதுபற்றி பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா சாவித்ரி போல நானும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனையில் சிக்கியிருப்பேன். நல்ல வேளையாக நான் ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்டு அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டேன் என குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் நடிகை அதிதி ராவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவராவார். சித்தார்த், அதிதி ராவ் இடையேயான காதல் செய்தி திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண