Baakiyalakshmi Serial: பாக்கியலஷ்மி சீரியலில் நடிகர் சித்தார்த் நடித்திருப்பதாக வெளியான புகைப்படங்களும், ஷூட்டிங் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தார்த், முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை எடுத்த  அருண் குமார் இயக்கி இருக்கும் சித்தா படத்தில் நடித்துள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை பற்றி பேசும் படத்தில் எமோஷனலாக நடித்து சித்தார்த் அப்லாஸ் வாங்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 


படம் ரிலீஸுக்கு முன்னதாக சித்தா படத்தை பார்த்த மணி ரத்னம், கமல்ஹாசன் பாராட்டியதாக சித்தார்த் கூறியிருந்தார். படத்திற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருவதால் சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில், சித்தார்த் பிரபல சீரியலில் நடிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 


தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளன. குடும்பம் மற்றும் சமூக புறக்கணிப்பை எதிர்த்து ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேறுவது சீரியலின் கதைக்களமாக உள்ளது. கணவனின் எதிர்ப்பு, எதிரிகளின் சூழ்ச்சி என ஒவ்வொரு சூழலையும் கையாண்டு வெற்றிப்பெற்று வரும் பாக்கியலட்சுமி தமிழக பெண்கள் கொண்டாடும் சீரியலாக உள்ளது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த் இடம்பெற்றிருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. 


பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுசித்ரா பகிர்ந்த வீடியோவில், “அமிர்தாவின் குழந்தையான நிலை தெருவில் விளையாடி கொண்டிருக்கும்போது சித்தார்த்தின் பைக்கில் விழுந்து விடுகிறார். உடனடியாக குழந்தையை சித்தார்த் காப்பாற்றுவதும், அதேநேரம் அங்கு வரும் பாக்கியா சித்தார்த்துக்கு நன்றி கூறுவது, பின்னர் சித்தார்த் அவர்களின் வீட்டுக்கு செல்லும் காட்சிகளும்” இடம்பெற்றுள்ளன. மேலும், சித்தார்த்துடன் பாக்கியா புகைப்படம் எடுத்து கொண்டதும் இணையத்தில் பகிரப்பட்டது. 






இதை பார்த்த பலரும் பாக்கியலட்சுமி சீரியலில் சித்தார்த் நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருசிலர், சித்தார்த் நடித்துள்ள சித்தா படத்தின் ப்ரோமோஷனுக்காக சீரியலில் ஒரு காட்சியில் அவர் வருவதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: Chandramukhi 2 Review: வேட்டையன் கேரக்டரில் ட்விஸ்ட் வைத்த பி.வாசு.. சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!


Iraivan Movie Review: தியேட்டரை அலற வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவி ஜெயித்தாரா.. 'இறைவன் ' பட முழு விமர்சனம்!