90ஸ் கிட்ஸாக இருந்தாலும் சரி , 2k கிட்ஸாக இருந்தாலும் சரி , இரண்டு தலைமுறை இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இரு பெரும் நடிகர்கள் சினிமாவில் கோலோச்சுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி இந்த காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வியக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் .  விஜய் அப்பாவின் அறிமுகத்தான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் , இன்று அவர் உருவாக்கியிருக்கும் சாம்ராஜ்யம் , சொந்த உழைப்பாலும் தன்னம்பிக்கையினாலும் வந்தது. அது இடையில் வந்தது கிடையாதாம் . தனது முதல் படத்தில் இருந்தே தனக்கான சவால்களை தானே உருவாக்கி கொண்டவர் என்கிறார், அவருடன் பல படங்களில் நண்பர்காவும் , காமெடியனாகவும் நடித்த சாப்ளின் பாபு.




அதில்”என்னுடைய சினிமா கெரியரில் முதல் ஹீரோ விஜய் சார்தான். முதல் படத்திலேயே பெரிய ஸ்டாராக வருவார் என்ற நம்பிக்கை இருந்தது.நாளைய தீர்ப்பில்தான் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னதாக எனக்கு பெரிய ஹீரோவுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் தன்னுடைய முதல் படத்திலேயே அவ்வளவு கடின உழைப்புடன் செய்லபட்டார். சினிமா மீது ஈடுபாடு அதிகம். ஒரு பக்கம் டயலாக் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வச்சுட்டு உட்கார்ந்திருக்க மாட்டாரு. ஒரு இரண்டு தடவை படிச்சுட்டு , முன்றாவது டேக் போயிடுவாரு.


ஒரு படத்துல அறிமுகப்படுத்தினால் மட்டுமே ஹீரோவாக மாறிட முடியாது. அது அவருடைய தனிப்பட்ட திறமை. நாளைய தீர்ப்பு படத்தில் ஒரு கோர்ட் சீன் வரும் அது பெரிய ஷார்ட் , அதுல சரத் பாபு சார் , பேசிட்டு இருப்பாரு. நீதிபதிக்கு பக்கத்துல கேமராவை வச்சுட்டாங்க. இரண்டு பக்கமும் மாறி மாறி பேசனும் , அவர் தெலுங்குல எழுதி வச்சுக்கிட்டாரு. ஒரே டேக்ல எடுத்துட்டாங்க. செம கிளாப்ஸ் எடுத்து முடிச்சதும். விஜய் சார் அதை பார்த்துட்டு எனக்கும், இதே மாதிரி சீன் வேண்டும்னு அடம் பிடிச்சாரு.அதன் பிறகு அதே மாதிரி ஒரு சீனை ரெடி பண்ணி , முட்டுக்காடு பகுதியில எடுத்தாங்க. நாங்க எல்லோரும் உட்கார்ந்திருப்போம் எங்களுக்கு நடுவுல சுற்றி பேசிட்டே வருவாரு, ஒரே டேக்ல எடுத்தாங்க. அதே கிளாப்ஸ் வாங்குனாரு. அந்த ஆர்வம் அவருக்கு அப்போதிலிருந்தே இருக்கு. மிகப்பெரிய ஸ்டாரா வருவார்னு தெரியும் . ஆனால் இந்த அளவுக்கு வருவார்னு எதிர்பார்க்கவில்லை “ என  தெரிவித்துள்ளார் சாப்ளின் பாபு.