அண்மைக்காலங்களில் இந்தியில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை. மாறாக தென் இந்திய இயக்குநர்களின்  கமர்சியல் படங்கள் இந்தியளவில் ரசிககளால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அட்லீ இயக்கிய ஜவான் , அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 , பிரபாஸ் நடித்த கல்கி , சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் என பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் தென் இந்திய இயக்குநர்கள். அடுத்தபடியாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிகந்தர் படத்தின் மீதும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் பாலிவுட் நடிகர்கள் தென் இந்திய இயக்குநர்களின் படங்களில் நடிக்க அதிக விருப்பம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஜவான் படத்தைத் தொடர்ந்து ஷாருக் கான் அடுத்தபடியாக மற்றொரு தென் இந்திய இயக்குநர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

புஷ்பா 2 இயக்குநருடன் கைகோர்க்கும் ஷாருக் கான் 

அல்லு அர்ஜூன் நடித்து கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. உலகளவில் ரூ 1742 கோடி வசூலித்தது. தெற்கு மாநிலங்களில்  மட்டும் இல்லாமல் வட  மாநிலங்களில் இப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இயக்குநர் சுகுமார் இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக் கான் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இருவரும் இணைந்து சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை எடுக்க இருந்ததாகவும் தற்போது ரூரல் சப்ஜெக்ட் ஒன்றை படம்மாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் ஆக்‌ஷன் கலந்த படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் . 

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலீட்டியது. தமிழ் ரசிகர்களிடம் இந்த படம் பெரியளவில் கவனமீர்க்கவில்லை என்றாலும் இந்தி ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருந்தது.

Continues below advertisement