8 மாடி , 200 கோடி மதிப்பு...ஷாருக் கான் வீட்டில் இன்னும் இத்தனை ஸ்பெஷலா
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது சொந்த வீட்டை புதுப்பிக்க இருக்கிறார். இந்த வீட்டைப் பற்றிய மொத்த விபரங்களையும் பார்க்கலாம்

ஷாருக் கான்
மும்பையில் அம்பானி வீட்டிற்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்ட வீடு நடிகர் ஷாருக் கானுடையது. ஒவ்வொரு ஆண்டு பண்டிகையின் போதும் ஷாருக் கான் பிறந்த நாளின் போதும் அவரது வீட்டின் முன் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்பார்கள். ஷாருக் கானின் வீட்டிற்கு என ஒரு தனி வரலாறு இருக்கிறது. தற்போது தனது வீட்டை ஷாருக் கான் புதுப்பித்து வரும் நிலையில் இந்த வீட்டின் மொத்த விபரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்
ஷாருக் கானின் வீடு மன்னத்
ஷாருக் கானுக்கு சொந்தமான இந்த வீடு 1914 ஆம் ஆண்டு நரிமன் ஏ துபாஷ் என்பவரால் கட்டப்பட்டது. இத்தாலிய கட்டிடகலையை பிரதிபலிக்கும் விதமாக இந்த பங்களா கட்டப்பட்டது. தற்போது இந்த வீடு கிரேட் 3 பண்பாட்டு தளமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது 1980 மற்றும் 90 களில் இந்த வீடு திரைப்பட படப்பிடிப்பிற்காக விடப்பட்டு வந்தது. 2001 ஆம் ஆண்டு ஷாருக் கான் நடித்த யெஸ் பாஸ் படத்தின் படப்பிடிப்பு இந்த வீட்டில் நடைபெற்றது . அப்போது இந்த வீட்டை பிடித்துபோய் ஷாருக் கான் உடனே இந்த வீட்டை 13 கோடிக்கு வாங்கியுள்ளார்.
Just In




ஒரு வீடு வாங்க தானும் தனது மனைவியும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்ததாகவும் அப்போது இந்த வீட்டை பார்த்து பிடித்துபோய உடனே கையிலிருந்த பணத்தை எல்லாம் சேர்ந்து இந்த வீட்டை வாங்கியதாகவும் ஷாருக் கான் தெரிவித்துள்ளார். கையில் இருந்த பணத்தை எல்லாம் சேர்த்து வாங்கியதால் வீட்டை புதுப்பிக்கதற்கான பணம் தங்களிடம் இல்லை இதனால் தனது மனைவி கெளரியே இந்த வீட்டை எப்படியெல்லாம் புதுப்பிக்க வேண்டும் என திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மன்னத் (பிரார்த்தனை) என இந்த வீட்டிற்கு அவர்கள் பெயர் வைத்தார்கள்.
பிரதான கட்டிடத்தை அரசு அனுமதி இல்லாமல் எந்த வித மாற்றமும் செய்யமுடியாது. அதனால் பிரதான கட்டிடத்தை இணைத்தபடி ஆறு மாடி கொண்ட வீட்டை கட்டினார் ஷாருக் கான். மும்பை பாந்த்ரா பகுதியில் கடைப் பார்த்த மாதிரி அமைந்துள்ளது இந்த வீடு. அன்று ஷாருக் கான் 13 கோடிக்கு வாங்கிய இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 200 கோடியாகும் . தற்போது மேலும் 2 மாடிகளை கட்டுவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கு 25 கோடி ஷாருக் கான் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.