மாதவன்

இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் மாதவன். மாதவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண் ஒருவருடன் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பெண்களுடன் காதல் உரையாடலில் அவர் ஈடுபடுவதாக சிலர் கூறினார்கள்.  Parent Genee என்கிற குழந்தைகளை கண்கானிக்கும் செயலியின் அறிமுக நிகழ்ச்சியில் மாதவன் கலந்துகொண்டார். இதில் அவர் முதலீடும் செய்துள்ளார். இந்தியாவின் நிலப்பரப்பிற்கு ஏற்ற வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக மாதவன் பேசினார். பின் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மக்களுடன் பகிர்ந்துகொண்டார் மாதவன் 

இளம் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியது ஏன்

" குழந்தைகள் எந்த நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோகளுக்கு தெரிய வேண்டும். இதற்கு நான் என் வாழ்க்கையில் ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஒரு நடிகர் . எனக்கு சமூக வலைதளங்களில் பலர் மெசேஜ் அனுப்புகிறார்கள். அந்த இளம் பெண் ஒருவர் எனக்கு மெசேஜ் செய்தார். நான் உங்கள் படத்தைப் பார்த்தேன். நீங்கள் ரொம்ப நன்றாக நடித்திருந்தீர்கள். என்று என்னை பாராட்டியிருந்தார். இத்துடன் இதய எமோஜிகளையும் நிறைய முத்த எமோஜிகளையும் அனுப்பினார். ஒருவர் என்னிடம் வந்து இவ்வளவு சொன்னால் நான் அவருக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

ரொம்ப நன்றி என்று அவருக்கு பதில் அனுப்பினேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று அனுப்பினேன். ஆனால் இதை அந்த பெண் தனது ஸ்டோரியில் போடுகிறார். அதை பார்க்கும் உங்களுக்கு அந்த பெண் என்ன அனுப்பினாள் என்பது தெரியாது ஆனால் நான் என்ன அனுப்பியிருக்கிறேன் என்பதை வைத்து நான் இளம் பெண்களுடன் காதல் உரையாடலில் ஈடுபடுவதாக சொல்வீர்கள். எனக்கு இருக்கும் பயம் ஒன்றுதான் நான் ஒவ்வொரு முறையும் ஒருத்தருக்கு மெசேஜ் அனுப்பும் போது அடுத்து என்ன நடக்கும் என பயப்பட வேண்டியதாக இருக்கிறது.  இதனால் நான் மட்டுமில்லை இன்னொருவரும் பாதிக்கப்படுவார் என்று நீங்கள் நினைப்பதில்லை" என மாதவன் தெரிவித்துள்ளார்