2026ஆம் ஆண்டு விஜய் ஆட்சி என்பது பகல் கனவு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் “தொண்டர்களை உற்சாகப்படுத்த அடுத்து நம்ம ஆட்சி என சொல்வது வழக்கம் தான்.

விஜய் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. மகத்தான தலைவர் எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது.

Continues below advertisement

யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். விஜய் அவர் ஆசையை பேசியிருக்கிறார். விஜய் போலவே பாஜகவுக்கும் கனவு இருக்கும். அமித்ஷாவின் பகல் கனவு பலிக்காது. மும்மொழிக்கொள்கையை அதிமுக ஏற்கவில்லை. மாநில அரசுக்கு நிதி தர மறுப்பதை ஏற்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக விஜய் கட்சியின் தேர்தல் ஆலோசராக உள்ள பிரசாந்த் கிஷோர் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகட்தில் வெற்றிடம் இருப்பதாகவே உணர்கிறேன். தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக விஜய் உருவெடுக்க போகிறார். அவர் பிரபலமே அவருக்கு பெரும் பலமாக உள்ளது. இந்த துறையில் எனக்கு உள்ள அனுபவத்தின் அடிப்படையில் நான் அவருக்கு வலு சேர்க்க விரும்புகிறேன். அதேபோல் பீகாரில் அவர் எனக்கு உதவுவார். பீகாரில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் பீகாரின் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை தரும். விஜய் தனித்து நிற்கவே விரும்புகிறார் என நினைக்கிறேன். தனித்து நின்றால் வெற்றி பிரகாசம் தான்.

அதிமுக பாஜக கூட்டணி அமைத்தால் திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தால் தவெக தனித்து போட்டியிட்டால் விஜய்யின் வெற்றி பிரகாசமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.