பாலிவுட்டின் புகழ்பெற்ற ஜோடிகளில் ஒன்று ஷாருக் கான் மற்றும் அவரது மனைவியான கெளரி கான்.  மூன்று குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இந்த தம்பதியினர். சமீபத்தில் தங்களது மகளாக சுஹானா கான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றை பகிர்ந்து  தனது கணவர் ஷாருக்கானுடன் தனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் கெளரி கான்.


 


சுஹானா கான்






 நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது சுஹானாவிற்கு இதுவே முதல் அனுபவம். இந்த நிகழ்ச்சியில் மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த ஒருவராக வெளிப்பட்டார் அவர். இந்த நிகழ்ச்சியில் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கெளரி கான்.


தனது திருமணத்திற்கு பின் தானும்  ஷாருக் கானுடன் முதல் முறையாக ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் கலந்துகொண்டார் என்றும் இன்று தனது மகளும் அதே மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் தனியாக கலந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் பேசுவதைப் பார்ப்பதற்க்கு வாழ்க்கை ஒரு வட்டம் போல் சுற்றிவருவதாக தான் உணர்வதாக பதிவிட்டுள்ளார் அவர்.


 


வாழ்க்கை ஒரு வட்டம்






இதற்கு பதிலளித்த ஷாருக் கான். “ ஆம் வாழ்க்கை ஒரு வட்டம்தான் . நமது கனவுகளை நமக்கு அடுத்ததாக நம் குழந்தைகள் தொடர்கிறார்கள்.  நீ அவர்களுக்கு நல்ல கல்வியை கொடுத்து  அனைவரையும் நேசிப்பதை சொல்லிக் குடுத்திருக்கிறாய். சுஹானா மிக தெளிவாக பேசக்கூடியவராக இருக்கிறார். ஆனால் அவரது கன்னத்தில் விழும் குழி மட்டும் அவர் என்னிடம் இருந்துப் பெற்றது.” என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.


ஜவான்


ஷாருக்கான் அடுத்தாக அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேது வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.